Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் பாடசாலையில் தலீபான்கள் கொடி.. நீக்கச்சென்ற காவல்துறையினரை மிரட்டிய மதகுரு.. வெளியான வீடியோ..!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள இஸ்லாமிய பாடசாலையில் ஏற்றப்பட்டிருந்த தலிபான்கள் கொடியை நீக்க வந்த காவல்துறையினரை, மதகுரு மிரட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருக்கும் Lal Masjid என்ற பள்ளிவாசலின் அருகில் இருக்கும் இஸ்லாமிய பாடசாலையில் தலிபான்கள் கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அந்த கொடியை நீக்க முயற்சித்துள்ளனர்.

 

ஆனால், அந்த பள்ளிவாசலின் மதகுருவான, மௌலானா அப்துல் அஜீஸ், கொடியை நீக்கவிடாமல் தடுத்ததோடு, காவல்துறையினரை மிரட்டியிருக்கிறார். அதாவது பாகிஸ்தானில் இருக்கும் தலிபான்களை உங்களை தாக்குவார்கள் என்று காவல்துறையினரை அவர் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பள்ளிவாசலின் வெளியில் மதகுரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மதகுருவுடன் சேர்ந்து மாணவர்களும் கொடியை நீக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், காவல்துறையினர் அங்கிருந்து சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |