ஆப்கானிஸ்தானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக போராடும் பெண்களை தலிபான் பயங்கரவாதிகள் சவுக்கால் அடிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பலரும் தற்போதைய ஆட்சிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஊடக அறிக்கைகள் காபூல் தெருக்களில் தலிபான்களுக்கு எதிராக போராடிய பெண்கள் தாக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ளார்.
அதில் தலிபான் பயங்கரவாதிகள் தங்களை சவுக்கால் அடித்ததாகவும், அரசை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுமாறு தலிபான்கள் கூறியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தங்களை வீடுகளை விட்டு வெளியேறுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பெண் எந்த உரிமையும் அளிக்கப்படாத போது நாங்கள் எதற்காக இந்த அரசினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் துணிச்சலுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.