ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் இனிமேல் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்து இருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் நடுநிலை கல்வியையும் உயர்நிலை கல்வியையும் பயில தடை விதித்துவிட்டார்கள். மேலும் அரசாங்க நிறுவனங்களிலும் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது.
பொது வெளிகளில் சென்றால் தலை முதல் கால் வரை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று கடுமையான ஆடை கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தினார்கள். இந்நிலையில் பெண்கள் இனிமேல் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கும் நேற்று தடை அறிவித்துள்ளனர்.