Categories
Uncategorized உலக செய்திகள்

“பொது இடங்களில் மரணதண்டனைக்கு தடை!”.. தலீபான்கள் உத்தரவு..!!

தலீபான்களின் இடைக்கால ஆட்சியின் தலைவரான முல்லா ஹசன் அகுந்த், அதிகாரிகளுக்கு பொது இடங்களில் மரணதண்டனை நிறைவேற்றுவதற்கும், உடல்களை தொங்கவிடுவதற்கும் தடை விதித்திருக்கிறார்.

தலீபான்களின் இடைக்கால ஆட்சியின் அமைச்சர்கள் கவுன்சிலானது, நாட்டில் பொது இடங்களில் மரணதண்டனை நிறைவேற்றுவதையும், இறந்தவர்களின் சடலங்களை தூக்கில் தொங்கவிடுவதையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் செயல்படுத்த வேண்டாம் என்று  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

தலீபான்களின், இடைக்கால ஆட்சியின் அமைச்சர்கள் குழுவிற்கான செய்தித் தொடர்பாளராக இருக்கும் Zabihullah Mujahid என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்திருக்கிறார். நாட்டில் நேற்று மரம் வெட்டுவதற்கும், மர வர்த்தகத்திற்கும் தலீபான்கள் தடை அறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலிபான்கள், இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டது, நாட்டு மக்களிடையே நம்பிக்கையை உண்டாக்கும் முயற்சியாக அமைந்திருக்கிறது.

Categories

Tech |