ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்து வருவது தொடர்பில் ஆலோசனை நடத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசர கோப்ரா கூட்டத்தை கூட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதிலிருந்து தலிபான்களின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. பல்வேறு முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் மக்கள் ஆயிரக்கணக்கில் கிராமங்களை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
இதேபோன்று ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தினால் காபூல் நகரே அழிந்துவிடும். இந்நிலையில் பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் அவசர கூட்டத்தை கூட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் பின்பு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.