ஆப்கானிஸ்தானில் அரசு பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கிறது என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் மாணவிகள் வருவது தொடர்பில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் அடைக்கப்பட்டிருக்கும் அரசு பல்கலைக்கழகங்கள் அடுத்த மாதத்தில் திறக்கப்படுவதாக தலிபான்கள் நேற்று அறிவிப்பு வெளியிட்டனர். எனினும், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் அனுமதிக்கப்படுவார்களா? என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கு முன்பு தலிபான்கள், பெண்கள் தனி வகுப்புகளில் கல்வி கற்கலாம் என்று கூறியிருந்தனர். மேலும், தற்போது வரை அந்நாட்டில் ஆண்களுக்குரிய உயர்நிலைப்பள்ளிகள் மட்டும் தான் திறக்கப்பட்டிருக்கிறது. எனவே, பல்வேறு பகுதிகளிலும் மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கிறார்கள்.