Categories
உலக செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவிகளை திருப்பியனுப்பிய தலீபான்கள்…. கண்டனம் தெரிவிக்கும் நாடுகள்…!!!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை, திறக்க தொடர்ந்து தடை விதிக்கப்படுவதால் தலிபான்களுக்கு பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினர். அதன்படி, சிறுவர்களையும் 12 வயதுக்கு குறைவான சிறுமிகளையும்  மட்டுமே பள்ளி செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் சுமார் 7 மாதங்கள் கழித்து ஆப்கானிஸ்தான் நாடு முழுக்க இன்று 12-லிருந்து 19 வயது வரை உள்ள ஆயிரக்கணக்கான மாணவிகள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லவிருப்பதாக நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது.

அதேபோன்று பல்வேறு மாகாணங்களில் மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். ஆனால் சில மணி நேரங்களில் அவர்களை வீட்டிற்கு அனுப்புமாறு தலிபான்கள் உத்தரவிட்டனர். ஆப்கானிஸ்தானின் கல்வி அமைச்சகத்தினுடைய செய்தி தொடர்பாளரான அஜீஸ் அஹ்மது ரேயான், இது பற்றி கருத்துக்கூற எங்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறியிருக்கிறார். எனினும், தலீபான்களின் இந்த நடவடிக்கைக்கு பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Categories

Tech |