கொரோனாவால் பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பழனியை தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழக முதல்வர் நலம் விசாரித்தார்.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி. அவரிடம் தொலைபேசி வாயிலாக பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்து இருக்கிறார்.
உடல்நிலை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கூறிய தமிழக முதல்வர், வேண்டிய மருத்துவ உதவிகளை உடனடியாக செய்யுமாறு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.அப்போது சட்டமன்ற உறுப்பினர் பழனி, நான் நலமாக இருப்பதாக தெரிவித்ததுடன் முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.