செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஆ.ராசா சொன்ன வார்த்தையை திமுகவினர் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று அர்த்தம். என்னனு ஏத்துக்கறாங்க? ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லி இருக்காரு ? திமுகவில் 90% பேர் இந்துக்கள். ஆ.ராசா என்ன சொன்னாரு.. திமுகவில் 90 சதவீதம் பேர் ”விபச்சாரி மகன்” அப்படின்னு அதனால…
ஆ.ராசாவ கட்சியை விட்டு நீக்கலைன்னா ஸ்டாலின் ஆ.ராசா சொன்னதை ஏத்துக்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர், முதல் அவருடைய, குடும்பத்தினர் உடைய, கட்சியினுடைய மானத்தை காப்பாத்தணும்.
நீங்க ஒட்டுமொத்தமா நாடு முழுவதும் இருக்கின்ற இந்துக்கள் ஆ.ராசாவை தண்டிக்க வேண்டிய விதத்திலே, வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம். இப்பொழுது மாநிலம் முழுவதும் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. எஃப் ஐ ஆர் ஆயிருக்கு. அரசாங்கம் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கலைன்னா.. உரிய அதிகாரிகளிடம் புகார் செய்திருக்கிறோம். அப்படியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது மாற எப்படி இருக்குன்னா… சில போலீஸ் ஆபீஸர் காக்கி டிரஸ்ஸை அவுத்து போட்டுட்டு, கரை வேட்டி கட்ட ஆரம்பிச்சுட்டாங்களோன்னு தோணுது என விமர்சித்தார்.