முதலமைச்சரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பை புதுப்பிக்க ரூ.3.10 கோடி ஒதுக்கப்பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை அடுத்து ஜெகன் மோகன் அரசு திட்டத்தை கைவிட்டது. ஆந்திராவில் ஜெகன் மோன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், முதலமைச்சரின் குடியிருப்பு மற்றும் அலுவலகம் ரூ.3 கோடியே 10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும் என கூறியிருந்தார். இது எதிர்கட்சிகளால் விவாதப் பொருளாக மாறிவிட்டது. மக்கள் […]
