வாய் தகராறு காரணமாக பழ வியாபாரி வாலிபர்கள் இருவரை கத்தியால் குத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பூச்சநாயகம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி மற்றும் கணேசன் கூலித் தொழிலாளர்களான இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். கோவில் திருவிழா நடந்து வரும் நிலையில் நேற்றிரவு கணேசன் மற்றும் கார்த்தி இருவரும் கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளனர். கோபியை சேர்ந்த பாபு என்கிற மேகநாதன் என்பவர் தள்ளுவண்டியில் அண்ணாச்சி பழம் வைத்து வியாபாரம் செய்து வருபவர். கார்த்தியும் கணேசனும் அவ்வழியாக சென்ற போது […]
