பொள்ளாச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அவிநாசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள போடிபாளையம் பகுதியில் பாபு என்ற இளைஞர் அதே பகுதியில் வசித்துவரும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி, பின் யாரும் இல்லாத விநாயகர் கோயிலுக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று, ரகசியமாக தாலி கட்டிவிட்டு, அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த சிறுமியை இளைஞர் கர்ப்பமாக்கியுள்ளார். […]
