சாலையை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் இளைஞர்கள் குளித்தலை சுடுகாட்டில் உள்ள சமாதிக்கு மனு கொடுத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் முத்துச்செல்வன் மற்றும் குளித்தலை பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் பலர் குளித்தலை சுடுகாட்டில் உள்ள சமாதியில் மனு அளித்துள்ளனர். இந்த மனுவில் கூறியிருந்ததாவது “கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை நகரத்தில் மூடப்பட்டிருந்த அண்ணா நகர் புறவழிச் சாலையை திறக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனும் இல்லை. இந்த சாலை திறப்பது தொடர்பாக […]
