மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இதில் வினோத்குமார் கொளத்தூரில் இருக்கும் விளம்பர நிறுவனத்தில் புகைப்பட கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஹேமாவதி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்பிறகு […]
