கோட்டார் பூங்கா கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள கோட்டார் பூங்கா நகரை சேர்ந்தவர் சுபாஷ்போஸ். இவரது மகள் சோனியா. 20 வயதான சோனியா அங்குள்ள கல்லூரியில் 3_ ஆம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து கல்லூரிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்ற சோனியா கல்லூரி வகுப்பு முடிந்து நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. சோனியா கல்லூரி முடிந்து வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த […]
