புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தாண்டவன்குளம் பகுதியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொக்லைன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் ஜெயலட்சுமி என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ஜெயலட்சுமி கர்ப்பமாக இருந்தால் தனது மனைவியுடன் சந்தோஷ் குமார் தனது மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மாமனார் வீட்டில் கழிப்பறையிலிருந்த பல்பு எரியாததால் அதை சரி பார்த்துக் கொண்டிருக்கும் […]
