இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் தெருவில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது விஷ்ணு நகர்ப்பகுதி அருகாமையில் வந்த நிலையில் எதிரே வந்த ஒரு கண்டெய்னர் லாரி இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. […]
