கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை வாங்காமல் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கட்டிட காண்டிராக்டரான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கடந்த 12-ஆம் தேதி வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கண்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் சென்ற மோட்டார் […]
