நேர்த்திக்கடன் செலுத்த சென்ற வாலிபர் ராட்சச கிரேனில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்றபள்ளி கிராமத்தில் இருக்கும் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சின்ன கொத்தூர் கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 3 பேருடன் இணைந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக முதுகில் அலகு குத்திக்கொண்டு ராட்சச கிரேனில் 40 அடி உயரத்தில் தொங்கியவாறு கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து […]
