குடிபோதையில் வாலிபர் வேல் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் 2 இடங்களில் வேல் மற்றும் மயில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளுக்கு பக்தர்கள் தினமும் மாலை அணிவித்து, சூடம் ஏற்றி வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் குடிபோதையில் அரை நிர்வாணத்தில் வந்த வாலிபர் ஒருவர் ரவுண்டானாவில் ஏறி வேல் சிலைக்கு மேல் நின்றுள்ளார். இதனால் வேல் சிலை 2 துண்டாக உடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]
