விசாரணையின் போது வாலிபர் மோதிரத்தை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த வாலிபர் தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் விஜய்(26) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில் விசாரணை நடைபெற்ற போது அந்த வாலிபர் தனது கையில் அணிந்திருந்த மோதிரத்தை விழுங்கியதால் காவல் நிலையத்தில் பரபரப்பு […]
