சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியரை வழியாக கேரளாவிற்கு சட்ட விரோதமாக புகையிலை, குட்கா, ரேஷன் அரிசி போன்றவை கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் புளியரை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகரிலிருந்து கேரளா நோக்கி சென்ற ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் சட்ட […]
