சரியாக படிக்காத காரணத்தினால் தாய் திட்டியதால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடகால் பகுதியில் யுவலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் யுவலட்சுமி சரியாக படிக்காத காரணத்தினால் அவரின் தாய் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த யுவலட்சுமி வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார். அதன்பின் மகளை நீண்ட நேரமாகியும் காணவில்லை என […]
