இளம்பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட குளத்துமேடு பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த இளம் பெண் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள முட்புதருக்கு அருகே சென்றபோது அவ்வழியாக வைரவன் குப்பம் கிராமத்தில் வசிக்கும் பன்னீர் என்ற வாலிபர் சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் இளம் பெண்ணை தாக்கியதோடு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]
