கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இளம்பெண் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் சீதாதேவி என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்துடன் சென்ற சீதாதேவி நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் அந்த பெண் கலெக்டர் விஜய கார்த்திகேயனிடம் ஒரு மனுவினை அளித்துள்ளார். அந்த மனுவில் தங்களது வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டி அமைந்துள்ளதாகவும், […]
