சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் வட மதுரையிலுள்ள தனியார் பஞ்சு மில்லில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி விடுமுறையையொட்டி வீட்டிற்கு வந்த சிறுமி மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
