உத்திரபிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சப்பாத்தியும் உப்பும் மதிய உணவாக கொடுக்கப்பட்டது போன்ற வைரலான வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் குக்கிராமம் ஒன்றில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் மதிய உணவாக சப்பாத்தி மற்றும் உப்பை மாணவர்களுக்கு வழங்கப்படும் காட்சியை செய்தியாளர் ஒருவர் படம் பிடித்து சமூக வலை தளத்தில் கடந்த மாதம் பதிவிட்டார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் மாநில அரசுக்கு எதிராக கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. […]
