நாடு (இந்தியா) முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் திரும்ப நினைத்த தொழிலாளர்களின் பயணம், காவல் துறையினரின் நடவடிக்கையால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது. தெலங்கானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு 2 கண்டெய்னர் லாரிகளில் சென்ற 300 பேரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருள்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே […]
