ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு குழப்பமான முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர் மாணவர்களின் எதிர்காலத்தில் தமிழக அரசு விளையாடுகிறது என குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது இந்த ஐந்தாம் வகுப்பு எட்டாம் தேர்வு விஷயத்தில் தமிழக அரசு ஒரு குழப்பமான முடிவுகளை எடுத்து விட்டது. அந்த குழப்பம் என்பதையும் தாண்டி ஒரு பெரிய அரசியல் நாடகத்தையே அரங்கேற்றும் நிலைக்கு கொண்டு […]
