பத்தாண்டுக்கு பின் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தீவிரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் விளையாட பாதுகாப்பு கருதி எந்த அணியும் முன்வரவில்லை.இந்நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தான் அணியுடன் இலங்கை அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்றது. ஆனால் அதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே மற்றும் லசித் மலிங்கா உட்பட முன்னணி வீரர்கள் அந்த தொடரில் பங்கேற்கவில்லை. […]
