உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பாதையின் மூலமாக பல மாற்றுத்திறனாளிகள் கடலில் இறங்கி மகிழ்ந்தனர். உலக மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்று (டிசம்பர் 3) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மாநகராட்சி சார்பாக ‘அனைவருக்குமான மெரினா கடற்கரை அனுபவம்’ என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகள் கடல் வரை சென்று அலைகளில் கால்களை நனைத்து மகிழும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடற்கரை சாலையிலிருந்து கடல் வரை தற்காலிக […]
