உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் க்ரூவ் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரத்தை தாண்டியதால் நூலிழையில் தங்கம் வெல்லும் வாய்பை நழுவவிட்டார். […]
