Categories
உலக செய்திகள்

அடுக்கு மாடியில் பரவிய தீ… பலியான பச்சிளம் குழந்தை… நேர்ந்த துயர சம்பவம்…!!

அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பற்றி எரிந்த தீ விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலுள்ள யெகாடெரின்பக் என்ற நகரில் ஒன்பது மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த தீயானது சிறிது நேரத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக பரவி விட்டது. அந்த நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கவனிக்கவில்லை. […]

Categories
உலக செய்திகள்

பாதிக்கப்பட்ட அன்றாட வாழ்வு… பனியால் மூடிய சாலைகள்… களமிறங்கிய மீட்பு குழுவினர்…!!

அதிகளவு பனிப்பொழிவு காரணமாக ஸ்பெயினில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பனியால் மூடப்பட்டு பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர். ஸ்பெயின் நாட்டில் பிளோமினா என்று பெயரிடப்பட்டுள்ள புயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் பணியால் மூடப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் சாலைகளில் நகர முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. அதோடு […]

Categories
உலக செய்திகள்

கடலில் விழுந்த விமானம்…. கண்டுபிடிக்கப்பட்ட கருப்பு பெட்டி…. விபத்துக்கான காரணம் பதிவானதா….?

இந்தோனேசியாவில் கடலுக்குள் விழுந்த விமானத்தின் 2 கருப்புப் பெட்டிகள் இருக்கும் இடத்தை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து போண்டியானாக் நகருக்கு ஸ்ரீவிஜய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் .737-500  ரக விமானம் 62 பயணிகளுடன் புறப்பட்டது ஆனால் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இழந்துவிட்டது. இதனால் ஜாவா கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து மீட்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து  விமானத்தின் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்த மக்கள்… 7 பேர் உயிரிழப்பு…!!

நிலச்சரிவில் சிக்கி 7 நபர்கள் உயிரிழந்த சம்பவம் நார்வே நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய கண்டங்களில் நார்வே நாட்டில் ஓஸ்லோ தலைநகரில் ஆக்ஸ் என்னும் கிராமம் உள்ளது. இங்கு பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. ஆக்ஸ் கிராமத்தில் ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் ஆக்ஸ் கிராமத்தில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. வீடுகளில் இருந்தவர்களும் மண்ணுக்குள் புதைந்தனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Categories
உலக செய்திகள்

2021-இல் நடக்க போகும் 5 ஆபத்துகள்….. 465 ஆண்டுகளுக்கு முன்பே அக்யுரூட்டாக கணித்த நாஸ்ட்ரடாமஸ்….!!

465 வருடங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்ட்ரடாமஸ் என்பவர் வாழ்ந்துள்ளார் இவர் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்பே கணித்து இருந்தார். அவர் கருத்துப்படி சில சம்பவங்கள் நடந்து வரலாறு படைத்தது. 3797 வருடம் வரை என்ன நடக்கும் என்பதை இவர் கணித்துள்ளார். நாம் இப்போது 2021 ஆம் வருடம் என்ன நடக்கும் என அவர் கணித்து இருப்பது குறித்து பார்க்கலாம். சோம்பிகள் பாதி உயிருடனும் பாதி இறந்த  நிலையிலும் சுற்றும் மனிதர்களை உண்டாக்கும் நோய் […]

Categories
உலக செய்திகள்

பைடனின் வெற்றி…. இறந்தவங்க ஓட்டு போட்டாங்களா….? எழுந்த புதிய சர்ச்சை…!!

பைடனுக்கு இறந்தவர்களின் பெயரில் வாக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது கடந்த நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க தேர்தல் நடைபெற்ற நிலையில் 290 வாக்குகளை பெற்ற ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஆனால் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ட்ரம்ப் நீதிமன்றத்திற்கு சென்றார். இதனையடுத்து சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை மறுபடியும் நடத்தப்பட்டு வருகின்றது. ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று ஜார்ஜியாவில் கைகளால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆனால் 290 வாக்குகள் பெற்ற ஜோ பைடன் வெற்றி ஜார்ஜியாவின் முடிவால் […]

Categories
உலக செய்திகள்

கல்யாணம் முடிந்த பின்… தேன்நிலவு செல்லாமல் பெண் செய்த செயல்… அதிர்ந்து போன தாத்தா..!!

திருமணம் முடிந்த பெண் புகுந்த வீட்டிற்கு செல்லாமல் 300 கிலோ மீட்டர் பயணம் செய்து தனது தாத்தாவை பார்க்க சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லண்டனை சேர்ந்த கிரஹாம் பரலி என்ற முதியவர் தனது குடும்பத்தை விட்டு பராமரிப்பு இல்லத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது பேத்தியான அலெக்ஸ் பியர்ஸ் திருமணம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தாத்தாவால் வயது முதுமையினாலும் அவருக்கு இருந்த நடுக்குவாத நோயினாலும் பேத்தியின் திருமணத்திற்கு தனியாக பயணம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

பல ATM இயந்திரங்களை… வெடிவைத்து கொள்ளையடித்த கும்பல்… பிரான்சில் வைத்து தூக்கிய போலீஸ்..!!

வெடி பொருட்களை பொருட்களை உபயோகித்து சுவிட்சர்லாந்தில் ஏடிஎம் மெஷின்களை வெடிக்கவைத்து கொள்ளையடித்த கும்பல் பிரான்சில் பிடிபட்டுள்ளது பிரான்சில் அமைந்துள்ள லயனில் வைத்து கொள்ளை கும்பல் ஒன்று அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளது. பிரான்ஸ் அதிகாரிகளுக்கு சுவிஸ் அதிகாரிகள் பல உதவிகளை செய்து வருகின்றனர். கடந்தவருடம் பிரான்ஸில் இருந்த வங்கிகளின் ஏடிஎம் மிஷின்களை இந்த கும்பல் தான் வெடிக்க வைத்து கொள்ளையடித்து உள்ளது. அதைப் போன்றுதான் சுவிட்சர்லாந்திலும் தங்கள் கைவரிசையை இந்த கும்பல் காட்டியுள்ளது. 4 பேர் அடங்கிய அந்த கும்பல் […]

Categories
உலக செய்திகள்

தீவில் ஜாலியாக… குழந்தைகளுடன் உணவு சமைத்த குடும்பத்தினர்… வாசனை நுகர்ந்து ஓடி வந்த ராட்சத உயிரினங்கள்..!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த குடும்பம் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது ராட்சத நண்டுகள் சூழ்ந்துகொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த குடும்பம் ஒன்று கிறிஸ்துமஸ் தீவிற்கு தங்கள் குழந்தைகளுடன் கேம்பு சென்றுள்ளது. அங்கு அவர்கள் சாப்பிட உணவு சமைத்து உள்ளனர். அப்போது உணவு தயாரான சிறிது நேரத்தில் அதன் வாசனையை நுகர்ந்தபடி ஏதோ ஒன்று ஊர்ந்து வருவதை குடும்பத்தினர் கண்டுள்ளனர். அவை 3 அடி நீளம் கொண்ட ராட்சத நண்டுகள் ஆகும். இது தொடர்பான […]

Categories
உலக செய்திகள்

பள்ளி மாணவிகள் இப்படி ட்ரஸ் போட கூடாது… அமைச்சர் சொன்ன கருத்து… கொந்தளித்து பெண்கள் எடுத்துள்ள முடிவு..!!

பிரான்சில் மாணவிகள் அணியும் உடையை விமர்சித்த அமைச்சரை எதிர்க்கும் விதமாக மோசமான செயல்களை பெண்கள் செய்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டு கல்வி அமைச்சரான ஜீன் மிக்கேல் பள்ளி மாணவிகள் மற்றவர்களை தூண்டும் விதமாக உடைகளை அணியக்கூடாது என்றும், அவர்கள் ரிபப்ளிகன் ஸ்டைலில் தங்களுடைய உடையை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். அதோடு இரவு விடுதிக்கு கடற்கரைக்கும் போவது போன்று அவர்கள் உடை அணியக் கூடாது என அமைச்சர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை […]

Categories
உலக செய்திகள்

இது உண்மை என்றால்…… “கொடூரத்தின் உச்சம்” இதை விட வேறு இல்லை….. நெட்டிசன்கள் கருத்து….!!

வடகொரியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிபர் கிம் ஜாங் உன் எடுத்த முடிவு கொடூரத்தின் உச்சம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீன எல்லையை பகிர்ந்துள்ள வடகொரியாவில் பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது. அதற்கு காரணம், அந்நாட்டு அரசு கொரோனாவை சிறப்பாகக் கையாண்டதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது […]

Categories
உலக செய்திகள்

செப் 11 முதல்….. 0 ஆன கொரோனா பலி….. புதிய நம்பிக்கையை பெற்ற கனடா மக்கள்….!!

கனடாவில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தற்போது 0 ஆக பதிவாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை உலகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், முன்பை காட்டிலும் தற்போது இந்த பாதிப்பை பல நாடுகள் சிறப்பாக கையாண்டு கட்டுப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கனடாவில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தற்போது 0 ஆக பதிவாகியுள்ளது புதிய நம்பிக்கையை அந்நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கொரோனா […]

Categories
உலக செய்திகள்

மக்களே நற்செய்தி : பயன்பாட்டுக்கு வந்த தடுப்பூசி….. வெளியான அதிகாரபூர்வ தகவல்…!!

கொரோனா வைரஸ்கான தடுப்பூசியை வினியோகம் செய்ய தொடங்கிவிட்டதாக ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் கையாண்டு வரும் சூழ்நிலையில், இதனை ஒரேடியாக முடித்து வைக்க தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கொரோனாவை தடுக்க, ரஷ்ய பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் புனித இடத்தில் எடுத்த நிர்வாண வீடியோ… சர்ச்சையில் சிக்கிய பிரான்ஸ் நாட்டுப் பெண்….!

பிரான்ஸ் நாட்டு பெண் இந்தியாவின் புனித இடத்தில் நிர்வாண வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்தனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் மேரி ஹெலென் என்ற பெண் கங்கை நதிக்கரையிலுள்ள  லட்சுமன் ஜூலா பாலத்தின் மீது உடைகள் இன்றி நிர்வாணமாக ஸ்டண்ட் காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது ஜாமீனில் […]

Categories
உலக செய்திகள்

காவல்துறையினரை அழைத்த பெண்… விசாரணையில் வெளியான சுவாரஸ்ய தகவல்…!!

பெண் ஒருவர் காவல்துறையினருக்கு அழைப்பு விடுத்ததால் விசாரணையில் வெளியான சுவாரசிய தகவலை அவர்கள் பகிர்ந்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் பெஷல் ஸ்டாட்ட் என்ற மண்டலத்தை சேர்ந்த ஒரு பெண் தொலைபேசி வழியாக காவல் துறையினரை அழைத்து தன் குடியிருப்பிற்கு அருகில் நாய் ஒன்று வெகுநேரமாக இருப்பதாகவும், பார்க்க பரிதாபமாக இருப்பதாகவும் கவலை தோய்ந்த குரலில் தெரிவித்துள்ளார். அந்த நாய் ஆபத்தில் சிக்கி இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதியுள்ளனர். அதனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கலாம் என முடிவு செய்து சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

இந்திய உணவகத்தை மூடியதால்…. பாராட்டிய பிரித்தானிய சுகாதாரத்துறை இயக்குனர்…!!

பிரித்தானியாவில் இந்திய உணவகத்தை மூடியதால் அந்நாட்டு சுகாதாரதுறை இயக்குனர் உரிமையாளரை பாராட்டியுள்ளார். பிரபல இந்திய உணவகமான அக்பர் உணவகம் பிரித்தானியாவில் செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த உணவகத்தில் பணியாற்றும் 7 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உணவகத்திற்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளித்து பாதிக்கப்பட்டவர்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த உணவகத்தின் உரிமையாளர் ஷாபிர் ஷிசைன் முடிவு செய்துள்ளார். அவரது இந்த முடிவிற்கு அந்நாட்டின் சுகாதாரத் துறை இயக்குனர் சாரா பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அக்பர் உணவகம் […]

Categories
உலக செய்திகள்

11 ஆண்டுகளாக காதலித்து சகோதரியை திருமணம் செய்யும் இளைஞன்…!

  தன்னுடைய சகோதரியை ஒரு இளைஞன் 11 ஆண்டுகளாக காதலித்து தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார். பேச்சுக்கலை சேர்ந்த மோட்டார் சைக்கிள் வீரர் மிகுயில் என்ற இளைஞன் . இவர் ஆண்ட்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இதில் ஆச்சரியப்படக்கூடிய செய்தி என்னவென்றால் ஆண்ட்ரியா என்ற பெண் அந்த இளைஞனின் தந்தையுடைய இரண்டாம் மனைவிக்கு பிறந்த மகள் ஆகும். இவர்கள் இருவரும் கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் குடும்ப மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் புதிய அறிவிப்பு….டிக் டாக் நிறுவனத்தை ஸ்தம்பிக்க வைத்த அரசு..!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய உத்தரவினால் டிக் டாக் நிறுவனம் ஸ்தம்பித்துள்ளது. அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலி அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம்சாட்டி தடை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 45 நாட்களுக்குள் டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க பதிப்பை வேறு நிறுவனத்திற்கு விற்க்க வேண்டும். இல்லையெனில் அமெரிக்காவின் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிக் டாக் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளுக்கு தடைவிதிக்கும் உத்தரவிலும் […]

Categories
உலக செய்திகள்

“என்ன கடத்திடாங்க” ஓட்டுக்காக போட்ட திட்டம்… விசாரணையில் அம்பலம்….!!

மேயர் பதவிக்காக அனுதாப ஓட்டுக்களை பெறும் திட்டத்தில் போலி வீடியோவை சபரினா வெளியிட்டு காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டார் . சபரினா பெல்ச்சர் என்பவர் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்தவர். கருப்பின பெண்ணான இவர் சம்ப்டர் நகர மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார். மக்களிடையே அனுதாப வாக்குகள் பெறுவதற்காக யாரோ தன்னை கடத்தியதாக போலியான வீடியோவை வெளியிட்டு மாட்டிக்கொண்டார். சபரினாவை காவல்துறையினர் போலி கடத்தலை அரங்கேற்றியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக் லைவ்வில் இந்த கடத்தல் வீடியோவை […]

Categories
உலக செய்திகள்

“கொடூரமானவர், பொய்க்காரர்” அதிபரை குற்றம் சாட்டிய ரத்த சொந்தம் …!

அமெரிக்க அதிபரின் சகோதரியான மேரி ஆன் டிரம்ப் அதிபர் கொடூரமானவர், பொய்க்காரர் என்று குற்றம் சாட்டியுள்ளார். அடுத்த அதிபருக்கான தேர்தல் அமெரிக்காவில் விரைவில் நடக்க உள்ள நிலையில் ட்ரம்ப் மீது அவரது சகோதரியிடமிருந்தே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேரி ஆன் டிரம்ப் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியேற்ற கொள்கை  குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். ட்ரம்பிற்கு கொள்கை என எதுவும் இல்லை அவர் கொடூரமானவர், பொய்க்காரரரும் கூட என்று ரகசிய பதிவில் மேரி அன் டிரம்ப் பேசியுள்ளார். அதிபர் ட்ரம்பின் […]

Categories
உலக செய்திகள்

“நோய் பாதிப்பு” 75 கோடி கொசுக்களை நாட்டில் விடும் அரசு… எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்….!!

அமெரிக்க அரசு கொசுக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த கொசுக்களுக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்டும் ஆய்வினை ஏற்றுள்ளது. உலகளவில்  புதிது புதிதாக நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகி வருகின்றன. இதற்கு வைரஸ்களும், கொசுக்களும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தநிலையில் கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்கன் குனியா மற்றும் ஜிகா போன்ற நோய்களை தடுப்பதாக விபரீத முயற்சியில் அமெரிக்க அரசு இறங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில்  இந்த ஆண்டு பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

“ராட்சத லாரி” மகனின் அறியாத செயல்… சிக்கி தவிக்கும் தந்தை…!!

மகன் அறியாமல் ராட்சத லாரி ஒன்றை வாங்கியதால் தந்தை பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறார் பிரித்தானியாவில் உள்ள வடக்கு டைன்சைட், வல்சென்ட் பகுதியை சேர்ந்தவர் முகமது ஃபராஜி. இவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். அச்சிறுவன் இணையதளத்தின் வழியாக சுமார் 19 ஆயிரம் பவுண்டுகள் மதிப்புள்ள ராட்சத லாரியை வாங்கியுள்ளார். இச்சம்பவம் நடந்த அன்று முகமது தனது மடிக்கணினியை அணைத்து வைக்காமல் சென்றுவிட்டார். இந்நிலையில் ராட்சத லாரி பொம்மைகள் மீது அதிக ஆர்வம் கொண்ட சிறுவன் […]

Categories
உலக செய்திகள்

உதவும் மனப்பான்மை கொண்ட சிறுமி… நடந்த கோர சம்பவம்… சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்…!!

உதவும் மனப்பான்மை கொண்ட சிறுமி விபத்தில் உயிர் இழந்ததால் அவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். பிரித்தானியாவில் கடந்த 10ஆம் தேதி பியூரி நகரில் 11 வயது சிறுமி சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் சிறுமியின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுமி ராயல் மான்சிஸ்டர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது […]

Categories
உலக செய்திகள்

நின்றுகொண்டிருந்த வேனில் ரகசிய அறை… சோதனை செய்த காவலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காவல்துறையினர் நின்றுகொண்டிருந்த வேனில் ரகசிய அரை இருந்ததை சோதனை செய்ததில் போதைப்பொருளை கண்டறிந்தனர். பிரித்தானியாவில் உள்ள டொனக்கஸ்டர் என்ற பெட்ரோல் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றை காவல்துறையினர் சோதனையிட்டனர். அந்த வேனில் ரகசிய அறை இருப்பதை கண்டறிந்தனர். அதற்குள் இருந்த 45 பாக்கெட்களில் பிரபல ஆடம்பர பொருட்கள் நிறுவனம் ஒன்றின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த பாக்கெட்களை பிடித்து பார்த்தபோது அதற்குள் கொக்கைன் எனும் போதைப் பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு 5.7 மில்லியன் பவுண்ட்கள். வேனை […]

Categories
உலக செய்திகள்

காதலனுடன் சென்ற மகள்… வீட்டிற்கு திரும்பிய போது… பெற்றோர் செய்த கொடுஞ்செயல்…!!

காதலித்ததால் பெண்ணின் பெற்றோர்கள் கோபமடைந்து சித்திரவதை செய்து மொட்டை அடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பெசன்கான் நகரத்தில் கிறிஸ்துவ இளைஞரை காதலிப்பதால் முஸ்லீம் பெண்ணின் தலையை மொட்டையடித்து கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜெனரல்ட் தர்மன் இச்செயலுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு பெற்றோரும், உறவினர்களும் சட்டத்திற்கு உட்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொள்ள அனுமதி […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு” உடல்நிலை மோசமான காதலன்… சிகிச்சை அறையில் காதலி செய்த செயல்… அதன்பின் நடந்த ஆச்சரியம்…!!

  கொரோனா நோயாளியை அவரது காதலி சிகிச்சையின் போதே திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து அவர் தொற்றிலிருந்து மீண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். கொரோனா தொற்று உலகம் முழுவதும் அதிகரித்து வருவதால் பல்வேறு நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னரே முடிவு செய்யப்பட்ட திருமணங்கள் கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் சில திருமணங்கள் குறைவான நாட்களிலேயே எளிமையாக நடந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கார்லெஸ் முனீஸ் என்பவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். […]

Categories
உலக செய்திகள்

“உன் காதலனை கடத்திட்டேன்” தேடிச் சென்ற பெண்…. கொடூரத்தின் உச்சமாக நடந்த சம்பவம்…!!

தனது காதலனை காப்பாற்ற மெக்ஸிகோவிலிருந்து சென்ற இளம்பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.   லிஸ்பேத் பிளோரஸ் என்ற இளம்பெண் உடைகள் அகற்றப்பட்டு, உள்ளாடைகளுடன் பிணமாக கிடந்ததால் அவர் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அவர் பணத்திற்காக தான் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அவரது சடலம் இருந்த இடம் கொள்ளை சம்பவங்களுக்கு பெயர்போன இடம் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக லிஸ்பேத்தின் பற்கள் பிடுங்கப்பட்டு, தலைமுடிகள் பிடுங்கப்பட்ட நிலையில் தலையில் கல்லால் அடித்து […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா அச்சம்” மாறிப்போன கலாச்சாரம்…. வைரலாகும் காணொளி…!!

ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆலோசனைக் கூட்டத்தின்போது இருநாட்டு அதிபர்களும் கைகுவித்து வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.   உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. மேலும் அவர்களின் செயல்பாடுகளையும் தலைகீழாக மாற்றிவிட்டது. பலநாடுகளில் இதுவரையிலும் தொற்றினை தடுப்பதற்காக ஊரடங்குகள் நடைமுறையில் உள்ளது. பல்வேறு உலக தலைவர்களின் முக்கியமான கூட்டங்கள் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களை சந்திப்பது போன்றவை பல கட்டுப்பாடுகளுடனே நடைபெற்று வருகிறது. Willkommen im Fort de Brégançon, liebe Angela! […]

Categories
உலக செய்திகள்

“தி நியூஸிலாண்டர்” பிரபலங்கள் மத்தியில்… பட்டத்திற்கு போட்டியிடும் பூனை…!!

இந்த ஆண்டு தி நியூஸிலாண்டர் பட்டத்திற்காக பத்து வயது நிரம்பிய பூனை ஒன்று போட்டியிடுகிறது. ‘தி நியூஸிலாண்டர் பட்டம்’ இந்த ஆண்டு ஒரு அற்புதமான போட்டியாக இருக்கப்போகிறது. இதன் காரணம் பல பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு ஹீரோவும் போட்டியிடப் போகிறார் என்று மிரியாமா காமோ கூறியுள்ளார். இந்த ஆண்டு நியூஸிலாண்டர் பட்டதிற்காக பிரதமர் ஜெசிந்தா ஆர்டேர்ன் மற்றும் நாட்டின் சுகாதார இயக்குனர் ஜெனரல் டாக்டர் ப்ளும்ஃபில்ட் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்களுடன் மிட்டேன்ஸ் என்ற பூனையும் போட்டியில் கலந்து […]

Categories
உலக செய்திகள்

“தனிமைப்படுத்தப்பட்ட நண்பர்” நாடு திரும்பியவர் செய்த செயல்…. சிறையில் அடைத்த நீதிமன்றம்…!!

நியூசிலாந்தில் நண்பரை கட்டியணைத்து குற்றத்திற்காக வெல்ஷ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார்.   இந்த மாத துவக்கத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய வெல்ஷ்ன் என்பவர்  தனிமைப்படுத்தப்பட்டிருந்த தனது நண்பரை பார்க்க ஆக்லாந்தில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர்  தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு சென்றதே விதிமீறல். ஆனால் அதன்பின் தனது நண்பரை கட்டிப்பிடித்து அதன்மூலம் இந்த விஷயத்தை மிகவும் பெரிதாக்கிவிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனிமைப்படுத்தப்பட்ட விதிகளைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும், நண்பருடன் பேசியது மட்டுமல்லாமல் அவரை கட்டிப்பிடித்துள்ளீர்கள் என்று […]

Categories
உலக செய்திகள்

விடுமுறை முடியும் தருணம்… “நாளைக்கு ஜாக்கிரதையாய் இருங்க” வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை…..!!

நாளை பிரான்ஸ் நாட்டு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த நான்கு நாட்களுக்கு பிரான்ஸ் நாட்டு வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், விடுமுறை முடிந்து திரும்புவோர் அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுமாறு கேட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நாளை வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது விடுமுறை முடியும் தருணம் என்பதால் பல்வேறு இடங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

உயிரிழந்த சிறுமி…. இறுதிச் சடங்கில் உறவினர்களுக்கு அதிர்ச்சி… 60 நிமிடத்தில் நேர்ந்த சோகம்….!!

இந்தோனேசியாவில் இறந்த 12 வயது சிறுமி மீண்டும் உயிர்த்தெழுந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் சிட்டி மசபியுபாஹ் வார்டாஸ் என்ற 12 வயது சிறுமி கடந்த 18 ஆம் தேதி நாள்பட்ட நீரிழிவு மற்றும் வேறு சில கோளாறுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மாலை ஆறு மணி அளவில் சிட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த சிறுமிக்கு இறுதி சடங்கு செய்ய குடும்பத்தினர் சடலத்தை எடுத்து சென்றனர். இறுதிசடங்கின் ஒரு பகுதியாக சிறுமியின் […]

Categories
உலக செய்திகள்

“விமான சாகசம்” உயிர் இழந்த கணவன்…. மகனின் பரிதாபநிலை…. குறுஞ்செய்தியால் கிடைத்த வாழ்க்கை…!!

தன் கணவனின் மரணத்திற்கு நீதி கிடைக்காவிட்டாலும் குடும்பங்கள் ஒன்றிணைந்த சம்பவம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் விமான சாகச நிகழ்ச்சி ஒன்று நடந்தபோது சாலையில் விமானம் விழுந்து வெடித்ததில் 11 பேர் பரிதாபமாக பலியானார்கள், மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். விமானத்தின் பைலட் உயிர்தப்பிய தோடு தண்டனையில் இருந்தும் தப்பித்தார். இச்சம்பவத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூறும் வகையில் கடந்த சனிக்கிழமையன்று ஒரு நிகச்சி நடந்துள்ளது. அந்நிகழ்வில் பங்கேற்றவர்களின் ஒருவர் டேன்யா ஹெவ்ஸ்டோன். இவரின் முன்னாள் கணவனான […]

Categories
உலக செய்திகள்

“இது தவிர வேற ஒன்னும் வேண்டாம்” கண்கலங்க வைத்த சிறுவனின் பதில்… தத்தெடுக்க குவிந்த கூட்டம்…!!

அமெரிக்காவில் ஒன்பது வயது சிறுவனை தத்து எடுக்க 12 மணி நேரத்தில் 5000 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஓக்லகோமா நகரை சேர்ந்த 9 வயது சிறுவன் ஜோர்டன் மற்றும் அவரது தம்பி பிரைசன். இவர்கள் இருவரும் தங்கள் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்தனர். ஒரு குடும்பத்தினர் பிரைசனை கடந்த ஆண்டு தத்தெடுத்து சென்றனர். அதற்குப்பின் ஜோர்டன் தனிமையில் வாடி வந்ததுடன், அன்பிற்கும், பாசத்திற்கும் ஏங்கியுள்ளான். இந்த நிலையில் உள்ளூர் தொலைக்காட்சி […]

Categories
உலக செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக…. “ட்ரம்பிற்கான இந்து குரல்கள்” தேர்தலில் புதிய முயற்சி…!!

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் இந்துகளின் வாக்குகளை கவர டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.   அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் சிறுபான்மையினராகவே இருந்து வருகின்றனர். 2016 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு சதவீதம் மக்கள் இந்துக்களாகும். அமெரிக்க அரசியலில் இந்துக்களுக்கான முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் அடையாளமாக குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் நவம்பர் […]

Categories
உலக செய்திகள்

“காட்டுத்தீ” வீட்டை விட்டு கிளம்பிய மக்கள்… தீயை அணைக்கச் சென்றவர் மரணம்…!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ ஏற்பட்டதால் பதட்டம் அடைந்து மக்கள் வெளியேறினர். அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பெரும் பாதிப்பை சந்தித்த மாகாணங்களில் கலிபோனியாவும் ஒன்று. இந்நிலையில் தற்போது கடுமையான காட்டுத்தீயை கலிபோர்னியா மாகாணம் எதிர்கொண்டு வருகிறது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுகையில் “மின்னல் தாக்குதல்களால் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள வனப்பகுதிகளில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் 1100 மின்னல் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் […]

Categories
உலக செய்திகள்

உலகின் மிகப்பெரிய புத்தர்…. “பெருக்கெடுத்த வெள்ளம்” 70 ஆண்டுகளுக்குப் பிறகு மூழ்கிய பாதம்…!!

உலகின் மிகப்பெரிய ஜெயன்ட் புத்தர் சிலையின் பாதங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் பாயும் யாங்சே ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் உலகிலேயே மிகப்பெரியதான  ஜெயண்ட் புத்தர் சிலையின் பாதங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. 233 அடி உயரத்தில் மலையைக் குடைந்து 1200 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த புத்தர் சிலையை பாதுகாக்க அதிகாரிகளும், தன்னார்வலர்களும் மணல் மூட்டைகளை கொண்டு வெள்ள நீரை தடுத்து வருகின்றனர். யுனெஸ்கோவின் பாரம்பரிய […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க தேர்தல்” மாநாட்டில் தமிழ் வார்த்தை…. வைரலாக்கிய நெட்டிசன்கள்….!!

துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தேர்தல் மாநாட்டில் தமிழ் வார்த்தை பேசியதை நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் வைரலாக்கி வருகின்றனர். ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்காக போட்டியிடுகிறார். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தேர்தல் மாநாட்டில் பேசியுள்ளார். அந்த உரையில் தனது அம்மாவை குறித்தும் குடும்பத்தினர் குறித்தும் நிகழ்ச்சியாக பேசியுள்ளார். அதில் “இனவெறிக்கு எதிரான பல கட்ட போராட்டங்களுக்கு பின்பு அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கான சுதந்திரம் கிடைத்தது. நாம் […]

Categories
உலக செய்திகள்

“வறுமை” உயிர்வாழ கிளம்பிய கூட்டம்…. வழியில் நேர்ந்த சோகம்…!!

ஆப்பிரிக்காவிருந்து வந்த அகதிகளின் படகு லிபியாவில் விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அகதிகளின் படகு லிபியாவில் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் “ஆப்பிரிக்க நாட்டில் உள்ள சினகல், மாலி, சாட், கானா போன்ற பகுதிகளிலிருந்து வந்த அகதிகளின் படகு லிபியா கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த உள்ளூர் மீனவர்கள் மீட்பு பணியில் […]

Categories
உலக செய்திகள்

வலது கையில் குழந்தை… இடது கையில் ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கிய நபர்… அதிர்ந்து பொதுமக்கள்… பின் நடந்தது என்ன?

பெண்ணொருவர் ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு மறுகையில் ஜன்னலைப் பிடித்துக் கொண்டு உயர்ந்த கட்டிடத்தின் மேல் நின்ற காணொளி வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் வெப்சிட் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் இருந்து திடீரென பெண்ணொருவர் ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியேறியுள்ளார். ஜன்னலுக்கு வெளியில் நிற்பதற்கு கூட இடமில்லாத சூழலில் அவர் ஒரு கையில் குழந்தையுடனும் மறு கையால் ஜன்னலைப் பிடித்துக் கொண்டும் உயரத்தில் நிற்பதைக் கண்ட மக்கள் பதறிப் போயினர். […]

Categories
உலக செய்திகள்

இப்படியும் நடக்குமா… அழகான வீட்டில்… 3 மாத குழந்தை உட்பட 50 பிள்ளைகளுக்கு நடந்த கொடூரம்… விடுப்பு எடுத்துக்கொண்டு ஓடிய அதிகாரிகள்..!!

மூன்று மாத குழந்தையிலிருந்து 50 குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து வன்கொடுமை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் அழகான வீடு ஒன்றின் அருகே வசிக்கும் மக்கள் அந்த வீட்டில் இருப்பது மிகவும் அமைதியான குடும்பம் எனக்கூறி இருந்தது. ஆனால் காவல்துறையினர் குறிப்பிட்ட வீட்டை சோதனை செய்த போது சகிக்க முடியாத காட்சிகளை பார்த்தவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பணியிலிருந்து சென்றுள்ளனர். அவர்கள் அந்த வீட்டில் பார்த்தது மூன்று மாத குழந்தையிலிருந்து 50 பிள்ளைகள் அந்த வீட்டில் இருந்தனர். தனக்குப் […]

Categories
உலக செய்திகள்

தாய் பாசம்ன்னா இதுதான்… தத்தளித்த மகன்… யோசிக்காமல் கடலில் குதித்த பெண்… ஆனால் மகன் கண் முன் தாய்க்கு நேர்ந்த சோகம..!!

கடலில் தத்தளித்த மகனை காப்பாற்ற சென்ற தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நேற்று முன்தினம் நார்போல்க் கடற்கரையில் டேனி என்ற பெண் தனது மகன் மற்றும் அவனது நண்பனுடன் தனது நேரத்தை போக்கிக் கொண்டிருந்தார். டேனியின் மகன் மற்றும் அவரது நண்பன் கடலில் விளையாடிக் கொண்டிருந்த சமயம் திடீரென தண்ணீரில் சிக்கி தடுமாறுவதை டேனி கவனித்துள்ளார். பின்னர் சிறிதும் யோசிக்காமல் பிள்ளைகளை காப்பாற்ற உடனடியாக கடலில் குதித்துள்ளார் டேனி. அவரைத் தொடர்ந்து அங்கிருந்த சிலரும் கடலுக்குள் […]

Categories
உலக செய்திகள்

மோடி சொன்னது உண்மை தான்…. ராமரை தரிசித்த பிரிட்டன் பிரதமர்….!!

மோடி சொன்னது உண்மை தான்…. ராமரை தரிசித்த பிரிட்டன் பிரதமர்….!!பிரிட்டன் பிரதமர் ராமரை தரிசிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த ஐந்தாம் தேதி பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்துத்துவ அமைப்புகளின் முக்கிய தலைவர்களும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். விழாவில் பேசிய பிரதமர் மோடி, ராமர் கோவில் ஒற்றுமையின் சின்னம். 500 ஆண்டு கால போராட்டத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

திருமணமான சில வாரங்களில்… மகனுக்கு நேர்ந்த சோகம்… கோமாவில் இருக்கும் தாய்… தவிக்கும் மனைவி..!!

தாய் மருத்துவமனையில் கோமாவில் இருக்க திருமணம் முடிந்து சில வாரங்களில் இளைஞன் நீர் வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரட்பார்டை சேர்ந்த பிலால் என்பவர் டேஷ் நதியின் நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நதியில் மூழ்கி உள்ளார். இதனைத்தொடர்ந்து உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும், மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் பெரும் சோகம் என்னவென்றால் பிலாலின் தாய் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

பறக்கும் விமானத்தில்… 15 வயது சிறுமியிடம் அத்துமீறிய கோடீஸ்வரர்… சிறையிலிருந்து விடுவிக்க கோரிக்கை..!!

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் நபர் கொரோனா அச்சத்தால் தன்னை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான ஸ்டீபன் என்பவர் 15 வயது சிறுமி ஒருவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு அச்சிறுமியிடம் 2 முறை தவறாக நடந்துள்ளார். அதேபோன்று 2019ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான தனி விமானம் ஒன்றில் சிறுமியை அழைத்துக் கொண்டு பயணித்த ஸ்டீபன் மீண்டும் அவரிடம் தவறாக நடந்துள்ளார். அதுமட்டுமின்றி சிறுமியை […]

Categories
உலக செய்திகள்

ஷார்ஜாவில் ஆஸ்பத்திரி வாசலில் பிரசவம்… நான் எதிர்பார்க்கவில்லை… குழந்தை பெற்ற சென்னை பெண் உருக்கம்..!!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஷார்ஜா மருத்துவமனை வாசலில் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூரை சேர்ந்தவர்கள் ஜாஹிர் அசாருதீன்-பர்வீன் பானு தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஏழு வயதில் தஸ்சீன் என்ற மகள் உள்ளார். இக்குடும்பம் ஷார்ஜாவில் வசித்து வருகின்றது. ஜாஹிர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியான பர்வீன் பானுவுக்கு அஜ்மானில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வரும் 16ஆம் தேதி பிரசவத்திற்கான தேதி குறிக்கப்பட்டது. ஆனால் பர்வீன் […]

Categories
உலக செய்திகள்

தனியாக வசித்து வந்த பெண்… பட்டப்பகலில் வீடு புகுந்து இளைஞர் செய்த கொடூரம்…!!

அமெரிக்காவில் அனுமதி இன்றி வீட்டில் நுழைந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா ஃபர்வியு ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த மார்க் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதே அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்த மார்க், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அப்பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் மார்க்கை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவர் மீது […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே உயரம்… 2,300 அடி உயர மலை உச்சியில் அமைந்துள்ள ஊஞ்சல்… த்ரில்லர் அனுபவம்..!!

சீனாவில் 328 அடி உயரம் கொண்ட ஊஞ்சல் திறக்கப்பட்டுள்ளது. சீனாவில் சோங்கிங் பகுதியில் 2,300 அடி உயரம் உள்ள மலை உச்சியில் உலகிலேயே அதிக உயரம் கொண்ட ஊஞ்சல் திறக்கப்பட்டு, அதுவே உலக அளவில் உயரமான ஊஞ்சல் என கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 328 அடி உயரம் கொண்ட அந்த ஊஞ்சல் 30 மாடி கட்டடத்தின் உயரத்திற்கு அமைந்துள்ளது. அதோடு இந்த ஊஞ்சல் சாகசம் செய்ய விரும்புபவர்களுக்கு பிடித்தமான விளையாட்டாக இருக்கின்றது. இவ்விடத்திற்கு வரும் சுற்றுலா […]

Categories
உலக செய்திகள்

தாய் மற்றும் மகளை தண்டவாளத்தில் தள்ளிவிட்ட இளம்பெண்… பின் நடந்தது என்ன?

இளம் பெண் ஒருவர் தனது தாயையும் மகளையும் ரயில் வரும் சமயத்தில் தண்டவாளத்தில் தலை விட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் பிரான்ஸில் இருக்கும் Bagneux RER ரயில் நிலையத்திற்கு 20 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் தனது தாய் மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் சென்றுள்ளார். ரயிலுக்காக காத்திருந்த அவர் திடீரென்று தனது தாயையும் தனது இரண்டு வயது மகளையும் தண்டவாளத்தை நோக்கி தள்ளி விட்டுள்ளார். இதனை பார்த்த சக பயணிகள் உடனடியாக அவ்விருவரையும் காப்பாற்றினார். இதனிடையே […]

Categories
உலக செய்திகள்

சுதந்திரத்தைப் பறிக்கும் சீனா… நாங்களே போறோம்…. ஹாங்காங்கில் இருந்து விலகிய டிக் டாக்…!!

சீனா தன்னாட்சி சுதந்திரத்தை பறிப்பதாக தகவல் எழுந்ததைத் தொடர்ந்து ஹாங்காங்கில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு இருக்கும் கருத்து சுதந்திரத்தை சீன அரசு பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக சீனாவுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் யாரேனும் கருத்துத் தெரிவித்தால் அவர்களை கைது செய்யும் முயற்சியை சீனா எடுக்கத் தொடங்கியது. இதன் காரணமாக ஆங்காங்கே இருக்கும் தன்னாட்சி சுதந்திரம் பறிக்கப் படுவதாக […]

Categories

Tech |