Categories
உலக செய்திகள்

ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு… மாயமான 70 பணியாளர்கள்… மீட்கப்பட்ட 5 சடலங்கள்…!!

நிலச்சரிவு ஏற்பட்டதால் தங்க சுரங்கத்தில் பணியில் இருந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 70 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தோனேசியாவில் உள்ள மத்திய சுலவேசி மாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவினால் அங்குள்ள மவுண்டோங் மாவட்டத்தில் இருக்கும் புங்கரா கிராமத்தில் இயங்கி வந்த தங்க சுரங்கம் கடுமையாக சேதம் அடைந்துவிட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இறந்து […]

Categories
உலக செய்திகள்

உருவாக்கப்படும் தற்கொலை படைகள்… கடத்தப்பட்ட 300 மாணவிகள்… எல்லை மீறிய தீவிரவாதிகளின் அட்டகாசம்…!!

தற்கொலைப்படை தீவிரவாதிகளாக மாற்றுவதற்கு 300க்கும் மேற்பட்ட மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் போகோ ஹராம் பகுதியில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த தீவிரவாதிகள் ஊருக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ- மாணவிகளை கடத்தி சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுகின்றனர். அதன் வரிசையில் நைஜீரியாவின் ஜம்பாரா மாகாணத்தில் இருக்கும் ஜங்கேபே கிராமத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான […]

Categories
உலக செய்திகள்

ரூம்லருந்து வெளிய வந்த போது மாட்டிடாங்க… கட்டுப்பாடுகளை மீறிய காதலர்கள்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக சிங்கப்பூரில் இந்திய பெண் சிறையில் அடைக்கப்பட்டார். சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகதா மகேஷ் என்ற பெண் வசித்து வருகிறார். இவரை இங்கிலாந்தில் வசிக்கும் நைகல் ஸ்கீயா என்பவர் காதலித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டதால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகதாவை பார்ப்பதற்காக நைகல் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். ஆனால் அப்போது சிங்கப்பூரில் தீவிரமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கபட்டதால், நைகல் அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டதோடு, அந்த […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகளின் கண்டனம்… முடக்கப்பட்ட ராணுவ கணக்குகள்… பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு…!!

பேஸ்புக் நிறுவனம் மியான்மரில் உள்ள ராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து கணக்குகளையும் முடக்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 1 ஆம் தேதி மியான்மரில் புதிய நாடாளுமன்றம் கூட இருந்த போது, ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள அந்த நாட்டின் தலைவி ஆங் சான் சூ கீ போன்ற தலைவர்களை விடுவிக்கக் கோரியும், ராணுவ ஆட்சியை எதிர்த்து மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“பெண்கள் தான் அதிகம்” தனிமையால் அதிகரிக்கும் தற்கொலை… அரசின் புதிய முயற்சி…!!

தனிமையால் அதிகரித்துவரும் தற்கொலைகளை தடுப்பதற்காக ஜப்பானில் தனிமை அமைச்சகம் அமைக்கப்பட்டு, தற்கொலைகளை தடுப்பதற்கு மந்திரி நடவடிக்கை எடுத்து வருகிறார். ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய பிறகு கடந்த ஆண்டு மட்டும் 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கிறது. இதில் 2153 பேர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் தற்கொலை செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது அந்த மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்ற […]

Categories
உலக செய்திகள்

தாங்க முடியாத சித்திரவதை… இந்திய பெண்ணினின் மூர்கத்தனமான செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வீட்டில் வேலைபார்த்து வந்த பெண்ணை சித்திரவதை செய்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன் என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த  2015ஆம் ஆண்டு இவரது வீட்டில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பியாங் நகாய் டான் என்ற பெண் வேலைக்காரியாக சேர்ந்துள்ளார். இவர் தனது 3 வயது மகனை காப்பாற்றுவதற்காக வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் திடீரென இறந்ததால் இது குறித்து தகவல் […]

Categories
உலக செய்திகள்

அரசுடன் ஏற்பட்ட மோதல்… பேஸ்புக் செய்திகளுக்கு விதிக்கப்பட்ட தடை… நிறுவனத்தின் இறுதி முடிவு…!!

ஆஸ்திரேலியா அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் செய்திகளை பகிர்வதற்கு பேஸ்புக்கில் விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்புக்கில் செய்திகளுக்கு தடை விதித்துள்ளது. எனவே […]

Categories
உலக செய்திகள்

மரியட் ஏரியில் மூழ்கிய படகு… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு… தீவிரப்படுத்தப்பட்ட மீட்பு பணிகள்…!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் பயணித்த படகு தண்ணீரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டில் உள்ள அலெக்சாண்டரியாவில் அமைந்துள்ள மரியட் ஏரியில் படகு சவாரி செய்வது மிகவும் பிரபலமானது. இந்த ஏரியில் நூற்றுக்கணக்கான மக்கள் படகு சவாரி செய்வதோடு, அந்த ஏரியில் உள்ள தீவிற்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவர். இந்நிலையில் மரியட் ஏரியில் உள்ள தீவிற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் படகு ஒன்றில் சவாரி செய்து அங்கிருந்து கரைக்கு […]

Categories
உலக செய்திகள்

டிக் டிக் நிமிடங்கள்… பறந்துகொண்டிருக்கும் போதே பற்றிய தீ… உச்சகட்ட அச்சத்தில் பயணிகள்…!!

வானில் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தில் தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானமானது அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து ஹோனாலுழு நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானத்தில் 10 விமான ஊழியர்கள் மற்றும் 231 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த விமானமானது தரையில் இருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஒரு என்ஜினில் திடீரென தீ பிடித்ததால் விமானம் உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்… சுனாமி எச்சரிக்கை மையத்தின் தகவல்…!!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஜப்பானில் உள்ள நமீ நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்போது, இந்த நிலநடுக்கமானது நமீ நகரில் இருந்து 90 கிலோ மீட்டர் கிழக்கு வடகிழக்கில் மையம் கொண்டிருந்தது. மேலும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அவரே என்கூட இருக்குற மாதிரி உணர்வு… எலும்பு கூட்டில் தயாரித்த கிட்டார்… இசைக்கலைஞரின் புது முயற்சி…!!

இசைக்கலைஞர் ஒருவர் மறைந்த தனது குருநாதரின் எலும்பு கூட்டிலேயே எலக்ட்ரிக் கிட்டார் ஒன்றை தயாரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ப்ளோரிடாவில் பிரபல இசைக் கலைஞருமான பிரின்ஸ் மிட்நைட் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆசானின் எலும்புக் கூட்டில் எலக்ட்ரிக் கிடார் தயாரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, தனக்கு கிட்டார் இசை கருவியை திறமையாக வாசிக்க தனது குருநாதர் கற்றுக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு குருநாதராகவும், உறவினராக இருந்த அவரின் நினைவாக […]

Categories
உலக செய்திகள்

உலகெங்கும் ஆதரவு குரல்… கார் ஓட்டுவதற்கான தடையை எதிர்த்த பெண்மணி… 1001 நாட்கள் பிறகு விடுதலை…!!

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டக் கூடாது என்ற தடையை எதிர்த்து குரல் கொடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்மணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் லூஜின் அல் ஹத்லால் என்ற பெண் வசித்து வருகிறார். அந்த நாட்டில்  பெண்களுக்கு என பல்வேறு தடைகள் உள்ளன. அவைகள் பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை, விளையாட்டுப் போட்டிகளையும், சினிமாவையும் நேரடியாக பார்ப்பதற்குத் தடை, முகம் தெரியாத அளவுக்கு ஆடைகளை அணிதல் போன்ற பல கட்டுப்பாடுகளை சவுதி அரேபியாவில் வாழும் பெண்கள் […]

Categories
உலக செய்திகள்

தடை விதித்த சவுதி அரசாங்கம்… மொத்தம் 20 நாடுகளின் பட்டியல் வெளியீடு… வருத்தத்தில் இந்தியர்கள்…!!

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த மக்கள் சவுதிக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சவுதி அரசாங்கம் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பொதுமக்கள் வருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சவூதி அரசு வெளியிட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, இந்தோனேஷியா, அர்ஜெண்டினா, பாகிஸ்தான், அயர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், எகிப்து, போர்ச்சுக்கல், லெபனான் […]

Categories
உலக செய்திகள்

“எனக்கு உதவி பண்ணுங்க” வலைதளத்தில் வைரலாகிய புகைப்படம்… அள்ளிகொடுத்த பொதுமக்கள்… வெளியான தகவலால் அதிர்ச்சி…!!

தனக்கு புற்றுநோய் இருப்பதாக சமூகவலைதளங்களில் புகைப்படத்தை பதிவிட்டு பொதுமக்களிடம் ஒரு பெண் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனிலுள்ள கெண்ட் என்னும் பகுதியில் நிக்கோல் எல்காப்ஸ் என்ற 42 வயது பெண்மணி வசித்து வருகிறார். இவர் சமூக வளைதளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் தான் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அதில் இருந்து மீண்டு வர அதிக பணம் தேவைப்படுவதால் தனக்கு உதவி செய்யுமாறும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். […]

Categories
உலக செய்திகள்

அவர் பதவிக்காலம் முடிந்தது…. இப்போ எதுக்கு இந்த தீர்மானம்…. தேசம் இரண்டாக வாய்ப்பு உள்ளது – ட்ரம்பின் வழக்கறிஞர்

ட்ரம்பின் பதவி நீக்க தீர்மானம் குறித்து செனட் சபையில் மும்முரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்காக நாடாளுமன்றத்தில் ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெரும் கலவரத்தில் சென்று முடிந்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஜனவரி 13-ஆம் தேதி பிரதிநிதிகள் சபையில் ட்ரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஜோ பைடன் பதவியேற்பு விழா காரணமாக செனட் சபையில் இந்த […]

Categories
உலக செய்திகள்

பாப் பாடகியின் கருத்து… பார்படாஸுக்கு சென்ற கோவிட் தடுப்பூசிகள்… நன்றி தெரிவித்த பிரதமர்…!!

இந்தியா கொரோனா தடுப்பூசிகளை பாப் பாடகி ரிஹானாவின் சொந்த நாடான பார்படாஸுக்கு அனுப்பி வைத்துள்ளதால் அந்நாட்டுப் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியின் எல்லைப் பகுதியில் தொடர் கனமழை, பனிப்பொழிவு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஹரியான, பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியும் அவை தோல்வியில் முடிந்ததால் வேளாண் சட்டங்களை திரும்ப பெறாமல் போராட்டத்தை […]

Categories
உலக செய்திகள்

“அத நான் சரியா கவனிக்கல” பேஸ்பேக்கால் ஏற்பட்ட மோசமான அனுபவம்…. என்ன செய்து மாறாத மஞ்சள் முகம்….!!

முகத்தில் இருக்கும் பருக்களை நீக்குவதற்காக மஞ்சள் கலவையை தயார் செய்து ஃபேஸ் பேக் போட்ட பெண்ணின் முகம் மஞ்சளாக மாறிய சோகம் ஸ்காட்லாந்தில் நிகழ்ந்துள்ளது. ஸ்காட்லாந்தை சேர்ந்த லாரன் ரென்னி என்பவர் முகத்தில் உள்ள பருக்ககளை நீங்குவதற்காக யூடியூப் பார்த்து தேன், பாதாம், மஞ்சள் போன்ற பொருட்களை கொண்டு ஃபேஸ் பேக் தயார் செய்து அதை தன் முகத்தில் போட்டுக் கொண்டு சிறிது நேரத்தில் பருக்கள் மறைந்து அழகான முகமாக மாறிவிடும் என்று நினைத்து போஸ்ட் ஒன்றையும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உலகத்துலேயே இவங்கதான் 2-வது நபர்… 116 வயதான ஆண்ட்ரே… கொரோனாவில் இருந்து மீண்ட அதிசயம்…!!

கொரோனா நோயிலிருந்து மீண்ட உலகிலேயே இரண்டாவது வயதான பெண்மணி தற்போது நலமாக உள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஆண்ட்ரே என்ற பெண்மணி உலகில் இரண்டாவது வயதான நபராக ஜெரண்டாலஜி ஆராய்ச்சிக் குழு அறிவித்திருந்தது. இவருக்கு 116 வயது ஆகின்றது. இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதியானதையடுத்து அவர் சிகிச்சைக்குப் பின் தற்போது மீண்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக பிரான்ஸ் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. இவர் கண்பார்வையற்று இருந்த போதிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் இந்து கோவில்கள் நிலை – அதிரவைத்த அறிக்கை…. நீதிமன்றத்தில் அதிர்ச்சி …!!

இந்து சமூகத்தின் பண்டைய மற்றும் புனித தளங்கள் பாகிஸ்தானில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக டாக்டர் ஷோயிப் சூடில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். பாகிஸ்தான் நீதிமன்றம் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான தீர்ப்பை மேல் பார்வையிடுவதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு டாக்டர் ஷோயிப் சூடில் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உள்ளது. இந்நிலையில் டாக்டர் ஷோயிப் சூடில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி இது தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

365இருந்துச்சு…. இப்போ 13தான் இருக்கு…! அழிக்கப்படும் இந்து கோவில்கள்… பாகிஸ்தான் அட்டூழியம் அம்பலம் …!!

பாகிஸ்தானில் இவாக்யூ அறக்கட்டளை தனது கட்டுப்பாட்டில் உள்ள சிறுபான்மையினர் இந்து ஆலயங்கள் குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்க்வாவின் கரக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்து ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை கடந்த டிசம்பர் மாதம் ஜாமியத் உலமா-இ- இஸ்லாம் கட்சியை சேர்ந்த ஃபசல் உர் ரஹ்மான் குழு உறுப்பினர்கள் எரித்துவிட்டனர். இதற்கு சிறுபான்மை இந்து சமூக தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் […]

Categories
உலக செய்திகள்

இஸ்லாமிய சட்ட விதிமீறல்… பொது இடத்தில் கிறிஸ்துவர்களுக்கு நடந்த கொடூரம்… இந்தோனேசியாவில் பரபரப்பு…!!

மது குடித்துவிட்டு சூதாட்டம் ஆடுயதற்காக 2 பேரை பொது இடத்தில் வைத்து கம்பால் அடித்து தண்டனை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் ஆச்சே மாகாணம் இஸ்லாமிய சட்டத்தை விதிக்கும் முஸ்லிம் பெரும்பான்மையுடைய ஒரே மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாகாணத்தில் கடந்த திங்களன்று மது அருந்திவிட்டு 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரில் 5 பேர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் மது அருந்தியது மட்டும் அல்லாமல் தகாத உறவில் ஈடுபட்டதல் […]

Categories
உலக செய்திகள்

இறக்கும் தருவாயில் தெரிந்த உண்மை… 28 வருடங்கள் கழித்து பெற்றோரை கண்டுபிடித்த வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு தனது உண்மையான பெற்றோரை கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் யாவ் சே என்ற கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த யாவ் சேக்கு அவருடைய தாயார் அவரது கல்லீரலை தானமாக வழங்க முன்வந்து ரத்த மாதிரிகளை கொடுத்துள்ளார். ஆனால் யாவ் சேவின் ரத்த மாதிரியானது, அவரது தாயின் ரத்த மாதிரியோடு ஒத்துப்போகவில்லை. […]

Categories
உலக செய்திகள்

உங்க ஆராய்ச்சிக்கு ஒரு அளவில்லையா…? 54 சிறிய காந்தங்களை விழுங்கிய 12 வயது சிறுவன்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

அறிவியல் சோதனை மீதுள்ள ஆர்வத்தில் 54 காந்தங்களை சிறுவன் விளங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ப்பிரிஸ்விட்ச் பகுதியில் ரிலே மோரிசன் என்ற 12 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்த சிறுவனுக்கு அறிவியல் குறித்த சோதனைகளில் ஈடுபடுவதில் எப்போதுமே ஆர்வம் அதிகம். இந்நிலையில் தன்னுடைய அறிவியல் சோதனைக்காக பந்து வடிவில் இருந்த சிறிய காந்தங்களை விழுங்கி வெளியில் உள்ள காந்த ஈர்ப்பு பொருட்கள் தனது உடலில் ஒட்டுமா அல்லது ஒட்டாதா என்று சோதித்து உள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பிளாஸ்டிக் ஏவுகணை தாக்குதல்… ஆதரவை திரும்ப பெரும் அமெரிக்கா… ஓமனில் நீடிக்கும் பதற்றம்…!!

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய பிளாஸ்டிக் ஏவுகணையால் இரண்டு பெரிய வெடிவிபத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஹவுதி கிளர்ச்சி படைக்கும், அதிபர் மன்சூர் ஹாதிக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய பிளாஸ்டிக் ஏவுகணை மக்கள் தொகை மிகுந்த மரிப்பில் […]

Categories
உலக செய்திகள்

“நாங்களும் வாழ விரும்புகிறோம்” துருக்கி அதிபரின் புறக்கணிப்பு…. பார் ஓனர்கள் ஆர்ப்பாட்டம்….!!

துருக்கி அதிபருக்கு எதிராக அந்நாட்டு மதுக் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வணிக வளாகங்கள், கஃபே, சிகை அலங்கார நிலையங்கள் ஆகியவைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகின்றன. மேலும் பார், மதுபான கடைகள், இரவு நேர கேளிக்கை விடுதிகள் ஆகியவை கடந்த 11 மாதங்களாக பூட்டப்பட்டிருந்த நிலையில் இதுவரை திறக்க […]

Categories
உலக செய்திகள்

நீதிமன்ற விசாரணை வீடியோ கால்… திடீரென வந்த பூனை சத்தம்… அதிர்ச்சி அடைந்த நீதிபதி…!!

நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் இருக்கும் போது திடீரென பூனை பில்டர் இயங்கி வழக்கறிஞர் பேசியது பூனை பேசுவது போல் தெரிந்ததால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார். அமெரிக்காவில் ரோட் போண்டோன் என்ற வழக்கறிஞர் வசித்து வருகிறார். உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி வகுப்புகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் இதர நிறுவனங்கள் தொடர்பான அனைத்து சந்திப்புகளும் ஆன்லைனில் வீடியோ கால் மூலமாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதன் படி வழக்கறிஞரான ரோட் தனது உதவியாளரின் கணினி மூலம் ஆன்லைன் […]

Categories
உலக செய்திகள்

“என்னை நல்ல பார்த்து கொள்வார்” 80 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண்… மகளை சாட்சியாக வைத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

29 வயது இளம்பெண் 80 வயது முதியவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கேப்டவுன் நகரில் டெர்ஸல் ராஸ்மஸ் என்ற சட்டம் படித்து வரும் 29 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் வில்சன் என்ற 80 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து டெர்ஸல் கூறும்போது, கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் வில்சனை பார்த்ததாகவும், அப்போது தனது பக்கத்தில் அமரலாமா என வில்சன் அனுமதி கேட்டது […]

Categories
உலக செய்திகள்

அம்மா மேல இவ்வளவு பாசமா…? வாலிபரின் புதிய சிந்தனை… பயனடையும் பொதுமக்கள்… குவியும் பாராட்டுகள்…!!

தனது தாயார் மீது உள்ள பாசத்தில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஒரு இணையதளத்தை உருவாக்கிய இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர். அமெரிக்காவின் பிரபல நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக ஹியூஜ் மா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் கொரோனா தடுப்பூசியை தனது தாய்க்கு செலுத்த வேண்டும் என முடிவு செய்தார். ஆனால் தடுப்பூசி போட வேண்டும் என்றால் அமெரிக்காவில் இணையதளத்தில் முன்னரே அப்பாயின்மென்ட் பெறுவது என்பது கட்டாயமான ஒன்றாகும். இதனால் அரசு இணையதளத்தில் அப்பாயின்மென்ட் பெறுவதற்காக பல்வேறு முயற்சி […]

Categories
உலக செய்திகள்

“அதை நான் விரும்பவில்லை” உணவு வாங்க ரெடியா இருந்த பெண்… திடீரென வந்த குறுந்தகவல்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

இளம்பெண் ஆடர் செய்த உணவை கொண்டுவந்த ஊழியர் அதனை சாப்பிட்டு விட்டதாக அந்த இளம்பெண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. லண்டனில் இல்யாஸ் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் பர்கர் போன்ற உணவு பொருட்களை உபர் ஈட்ஸ் மூலம் ஆர்டர் செய்வது வழக்கம் என்பதால் உணவை ஆர்டர் செய்துள்ளார். அதன்படி அந்த இளம் பெண்ணிற்கு நீங்கள் ஆர்டர் செய்த உணவு பொருளானது வந்து கொண்டிருக்கிறது என்ற தகவலானது கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவரது செல்போன் […]

Categories
உலக செய்திகள்

சக்கி வாய்ந்த நிலநடுக்கம்… எழும்பும் ராட்சச அலைகள்… சுனாமி வருவதற்கு வாய்ப்பு… ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கும் பிஜிக்கும் இடையே கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்போது, இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்ததாகவும், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி உருவாகும் அச்சம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் நியூசிலாந்து பிஜி மற்றும் வனுவாட்டுவின் […]

Categories
உலக செய்திகள்

ஸ்ப்ரேயை பயன்படுத்திய பெண்… தலையோடு ஒட்டிக்கொண்ட முடி… மன்னிப்பு கேட்ட நிறுவனம்… USAவில் விவாதமான சம்பவம் …!!

கொரில்லா க்ளூ ஸ்ப்ரேயை உபயோகித்தத பெண் ஒருவருக்கு தலையில் முடி ஒட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள லூசியானா பகுதியில் டெசிகா பிரவுன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் வழக்கமாக தலைமுடியைப் பராமரிக்க பயன்படுத்தப்படும் ஹேர் ஸ்ப்ரேக்கு பதிலாக கொரில்லா க்ளூ ஸ்ப்ரேயை உபயோகித்ததாக தெரிவித்துள்ளார். இந்த கொரில்லா க்ளூ ஸ்ப்ரே பயன்படுத்திய பிறகு […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! ”இது என்ன புது டெக்னிக்”… சுற்றுலா வந்தால் காசு…. அமெரிக்காவில் புது முடிவு …!!

சண்டா மரியா பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்திய மதிப்பில் 7200 ரூபாய் வழங்கப்படும் என சுற்றுலாத் துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் அனைத்து துறைகளிலும் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இதில் சுற்றுலாத் துறையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அனைத்து நாடுகளும் தங்களது பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு பெரும் முயற்சியில் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

சீனா நல்லா ஒத்துழைக்குது…! கொரோனா அங்க இருந்து பரவல….. ஆய்வில் திடீர் திருப்பம் …!!

உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கொரோனா வைரஸ் வூகான் நகரில் இருக்கும் பரிசோதனை மையத்தில் இருந்து பரவவில்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளனர். உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றி 2020ஆம் ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் இருக்கும் வைரஸ் பரிசோதனை மையத்தில் இருந்து பரப்பியதாக […]

Categories
உலக செய்திகள்

சோபாவை சுத்தம் செய்ததில் கிடைத்த ஆச்சரியம்…. 50 வருடம் பழமையான கடிதம்…. எதிர்காலத்தை கணித்த சிறுமி…!!

பழைய சோபாவை சுத்தம் செய்தபோது தம்பதியினருக்கு கிடைத்த 50 வருட பழமையான கடிதம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பீட்டர்-ரோஸ் பெக்கேர்டன். இவர்கள் தனது வீட்டில் உள்ள ஒரு பழைய சோபாவை சுத்தம் செய்யும் போது சோபாவின் பின் புறத்தில் இருந்த ஒரு பழைய கடிதம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதனை எடுத்து பீட்டர் தனது மனைவியிடம் காண்பித்துள்ளார். இருவரும் அந்த கடிதத்தை பார்த்து விட்டு மிகுந்த ஆச்சரியத்தில் உள்ளனர். ஏனென்றால் 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் […]

Categories
உலக செய்திகள்

என் மனைவியை காணும்…. எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்…. கணவனின் நாடகத்தை அம்பலப்படுத்திய போலீஸ்….!!

மனைவி பிரிய நினைத்ததால் கொடூரமாக எரித்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றியவர் ஜோனாதன் டேவல். இவருடைய மனைவி அலேக்சியா. ஒருநாள் ஜாகிங் சென்ற தன் மனைவியை காணவில்லை என்று ஜோனாதன் டேவல் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மோப்ப நாய்களுடன் களமிறங்கிய போலீசார் 2 நாட்களுக்குப் பின் மரங்கள் அடர்ந்த பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த அலேக்சியாவின் உடலை கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

3 வயது குழந்தையை கொன்ற காதலன்… மறைக்க நினைத்த தாய்…. நீதிமன்றம் கொடுத்த தண்டனை….!!

மகனை கொலை செய்த காதலனை காப்பாற்ற முயன்ற தாய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிலுள்ள உள்ள ரெய்ம்ஸ் என்ற நகரில் கரோலின் என்ற பெண் வசித்து வருகிறார். அவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சம்பவம் நடந்த அன்று அவர் தனது புது காதலனான வண்ட்டல் என்பவருடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் வண்ட்டல் குழந்தையை தாக்கியதில் குழந்தைக்கு நினைவிழந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு கரோலின் அவசர உதவி குழுவை அழைத்து […]

Categories
உலக செய்திகள்

அப்போ இது உண்மை இல்லையா…. உலகெங்கும் வைரலாகிய புகைப்படம்… ஆய்வில் வெளியான சில தகவல்கள்…!!

சமூக வலைதளங்களில் பேராசிரியரின் புகைப்படமானது சோகமான கதையுடன் வைரலாகி வருவது போலியான பதிவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ஒருவர் குழந்தையை தன் மீது வைத்துக்கொண்டு பாடம் எடுப்பது போல் உள்ள புகைப்படம் நாடு முழுக்க வைரலாகியுள்ளது. இந்த புகைப்படம் குறித்த பதிவுகளில் அதில் இருக்கும் கல்லூரி பேராசிரியர், அவரது மனைவி பிரசவத்தின் போது இறந்து விட்டதால் தனது குழந்தையுடன் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த வைரல் பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வேலையா….? மார்ச் 9 முதல் H1B விசா…. பதிவு பண்ண மறக்காதீங்க…!!

அமெரிக்காவில் வரும் மார்ச் மாதம் 9 தேதி முதல் 2022 ஆம் ஆண்டுக்கான எச்1பி விசாக்கள் பதிவு தொடங்கும் என்று அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது. வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணி புரிவதற்காக எச்1பி விசா வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விசாவில் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் வெளிநாட்டு பணியாளர்களால் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி முன்னாள் அதிபர் டிரம்ப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதில் எச்1பி […]

Categories
உலக செய்திகள்

இலவசமாக அனுப்பப்படும் தடுப்பூசி… மற்ற நாடுகளுக்கு உதவும் எண்ணம்… எப்போதும் இந்தியா துணை நிற்கும்…!!

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தியா நட்பு நாடுகளுக்கு எப்போதும் துணை நிற்கும் என்று கூறியுள்ளார். இந்தியா நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறது. அதன்படி மியான்மர், வங்கதேசம், மாலத்தீவு நேபாளம், பூடான், இலங்கை, மொரீசியஸ் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி மருந்தை அனுப்பி வைத்திருக்கிறது. இந்நிலையில் 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

சாதுர்யமாக செயல்பட்ட நாய்… எஜமானரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்…. குவியும் பாராட்டுகள்…!!

வலிப்பால் துடித்த தனது எஜமானரை சாதுரியமாக காப்பாற்றிய வளர்ப்பு நாயை அனைவரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர். அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் பிரைன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விலங்குகள் காப்பகத்தில் இருந்து ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்த நாயின் முதல் உரிமையாளர் வேறு மாகாணத்திற்கு இடம்பெயர்ந்த போது சேடி என்று அழைக்கப்பட்ட இந்த நாயை விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து தன் உரிமையாளரை பிரிந்து தவித்து வந்த இந்த நாயை பிரைன் […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் புதிய வைரஸ்…. இதுவும் மாற்றமடைந்து விட்டது…. செயற்கையாக உருவாக்கப்பட்ட தா….? எழுந்த புதிய சந்தேகம்…!!

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் மரபணுமாற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன நாட்டு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் சீனாவில் மிகப்பெரிய அளவில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் விரைவாக பரவியுள்ளது. இந்த பன்றிக்காய்ச்சலால் சீனாவில் அதிக எண்ணிக்கையிலான பன்றிகள் செத்து மடிந்துள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் தற்போது உருமாறிய புதிய வைரஸாக மாறியுள்ளது என சீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் இயற்கையாகவே உருமாற்றம் அடைந்து கொண்டதாக கூறப்படுகின்றது. இருப்பினும் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

காதலர் தினம் ஸ்பெஷல்… இலவச விவாகரத்து… சட்ட ஆலோசனை மையம் தரும் நூதன ஆஃபர்…!!

காதலர் தினத்தை முன்னிட்டு இலவசமாக விவாகரத்து பெற்று தரப்படும் என்று நூதன முறையில் ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. காதலர் தினம் என்றாலே அனைவருக்கும் குஷிதான். காதலர்களை ஈர்ப்பதற்காக வணிகர்கள் தங்கள் நிறுவனங்களில் தள்ளுபடி, பரிசு, சிறப்பு சலுகைகள் என பலவித சலுகைகளை அள்ளித் தருவது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் ஒரு சட்ட ஆலோசனை மையத்தில் ஒரு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு திருமணமான தம்பதிகளுக்கு இலவசமாக விவாகரத்து பெற்று தரப்படும் […]

Categories
உலக செய்திகள்

குப்புற கவிழ்ந்த பேருந்து… அலறி துடித்த பயணிகள்… பறிபோன 15 உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்திற்கு கராச்சிக்கு மாகாணத்தில் உள்ள பஞ்ச்குர் என்ற இடத்திலிருந்து பேருந்து ஒன்று சென்று உள்ளது. இந்த பேருந்தானது குவெட்டா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள், 5 பெண்கள் மற்றும் 7 ஆண்கள் என மொத்தம் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
உலக செய்திகள்

பதைபதைப்புடன் நகர்ந்த நிமிடங்கள்… சுட்டு வீழ்த்தப்பட்ட குழந்தைகள்… பெரும் முயற்சிக்கு பின் சிக்கிய நபர்… அமெரிக்காவில் பரபரப்பு…!!

அமெரிக்கா நடந்த துப்பாக்கி சூட்டில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் உள்ள துல்சாவில் இருந்து தென்கிழக்கு திசையில் 72 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முஸ்கோஜி என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதை கண்டனர். அவர்களில் ஒரு குழந்தை […]

Categories
உலக செய்திகள்

ஸ்கூல்ல கத்திகுத்து தாக்குதல்…. மாணவனை வைத்து மிரட்டிய நபர்… சுட்டு வீழ்த்திய போலீசார்…

சீனாவில் கத்தி குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டு வீழ்த்தி விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தும் சம்பவமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீனாவின் யுன்னான் மாகாணம் குன்மிங் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் நடைபெற்ற போது, கத்தியுடன் வந்த ஒரு நபர் பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்த மாணவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டார். அதன்பின்னர் பள்ளிக்குள் நுழைந்த அந்த நபர் அவரது கண்ணில் பட்ட அனைவரையும் […]

Categories
உலக செய்திகள்

சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. அதிர்ந்த வீடுகள்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள போண்டாகைடன் நகரிலிருந்து 219 மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.௦ ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் இந்த நிலநடுக்கமானது 139 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிலிப்பைன்ஸின் முக்கிய வணிக மையமான தவாயோ நகரில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது. அதோடு […]

Categories
உலக செய்திகள்

மனித வெடிகுண்டு…. அதிரவைக்கும் காட்சிகள்… நடந்த கொடூர சம்பவம்…. தாக்குதலின் விளைவுகள்…!!

ஈரானில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் பாப் அல் ஷர்க்கி என்ற முக்கியமான வணிக பகுதி உள்ளது. இங்கு மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 32 பேர் பலியாகினர். இதனையடுத்து எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்கு இன்னும் பொறுப்பு ஏற்காத நிலையில், இது […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்ட்டர்…. உயிரிழந்த வீரர்கள்…. கவர்னரின் அறிவிப்பு….!!

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஹெலிகாப்டரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த ஹெலிகாப்டர் மெண்டன் என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 3 வீரர்களும் உயிரிழந்து விட்டனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர […]

Categories
உலக செய்திகள்

எதுக்கு இந்த கலவரம்…. கோஷ்டி மோதலாக மாறிய கொடூரம்… அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு…!!

சூடானில் இரு தரப்பை சேர்ந்த பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதலில் 83 பேர் கொல்லப்பட்டதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடி இனங்கள் வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் பரவி காணப்படுகின்றனர். இந்த பழங்குடி இடங்களில் உள்ள மக்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் டார்பூர் மாகாணத்தின் தலைநகர் அல்ஜெனீனாவில் வசிக்கும் மசாலித் என்ற பழங்குடியினருக்கும், அராபி என்ற பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விட்டது. இந்த இரு தரப்பு பழங்குடியினரை சேர்ந்த தனிநபருக்கு இடையேயான வாக்குவாதமானது, […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணம்… மகள் மற்றும் மாமியாரை சுட்ட இந்தியர்…. அமெரிகாவில் தப்பி ஓடிய பெண்…!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் தனது மகள் மற்றும் மாமியாரை சுட்டுக் கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் உள்ள ஸ்கோடாக் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பூபிந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது வீட்டில் உள்ள குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மிகுந்த கோபமடைந்த பூபிந்தர் சிங் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக அங்குமிங்கும் சுட்டார். இதனால் பூபிந்தர் சிங்கின் மாமியார் மன்ஜித் கவுர் […]

Categories

Tech |