இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினர் அமெரிக்காவில் தான் வசிக்கும் குடியிருப்பில் இருந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார். இவர் தற்சமயம் அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் நான்கு வயது மகளும் இருந்தனர். இந்நிலையில் ஆர்த்தி மீண்டும் கர்ப்பமாகி இருந்தார். இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் ஒரு அடுக்குமாடி […]
