Categories
உலக செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. எரிவாயு வெடித்ததில் பயங்கர தீ விபத்து…. 2 பேர் உடல் கருகி பலி….!!

வீட்டில் உள்ள எரிவாயு வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ஆஷ்ஃபோர்டு நகரில் Willesborough, Mill View பகுதியில் இன்று காலை 8 மணிக்கு ஒரு வீட்டிலிருந்து வெடிகுண்டு வெடித்தது போன்ற சட்டம் கேட்டுள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் வெளியே ஓடிவந்து பார்த்தபோது அருகாமையில் இருந்த ஒரு வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வசித்த பிரித்தானிய இளம்பெண்…. துப்பாக்கியால் சுட்டு கொலை…. அதிரடி விசாரணையில் காவல்துறையினர்….!!

பிரித்தானிய இளம்பெண் ஒருவர் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பிரித்தானிய இளம்பெண்ணான மாயா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 26 வயது ஆகின்றது. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்திலிருந்து பாக்கிஸ்தானுக்கு வந்து வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர் கடந்த திங்கட்கிழமை தனது வீட்டில் தலையில் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டவுடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாயாவின் உடலை […]

Categories
உலக செய்திகள்

இடிந்து விழுந்தது மெட்ரோ ரயில் பாலம்…. இரண்டாக உடைந்து விழுந்த மெட்ரோ ரயில்…. பயங்கர விபத்தில் 15 பேர் பலி….!!

மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் அதில் பயணித்த ரயிலில் இருந்த 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் மெக்சிகோ நகரில் தென்கிழக்கு பகுதியில் டெசான்கோ மற்றும் ஒலிவோஸ்  மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் நேற்று இரவு 10.30 மணி அளவில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் அதில் பயணித்துக்கொண்டிருந்த மெட்ரோ ரயில் இரண்டாக உடைந்து கீழே விழுந்து உள்ளது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

வாக்கிங் சென்றபோது காணாமல் போன பெண்…. கடித்து குதறிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்…. இறப்பின் பின்னணியில் அதிர்ச்சி….!!

தனது இரண்டு நாய்களுடன் வாக்கிங் சென்ற இளம்பெண் கரடிகள் கடித்து குதறிய  நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கொலராடோ பகுதியில் Durango என்ற நகரில் பெண் ஒருவர் தனது இரண்டு நாய்களுடன் வாக்கிங் சென்றுள்ளார். அதன்பின் அவருடைய காதலன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கே இரண்டு நாய்கள் மட்டும் இருந்திருக்கிறது. ஆனால் அவருடைய காதலியை காணவில்லை. அதனால் அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தானும் காதலியை தேடும் பணியில் […]

Categories
உலக செய்திகள்

சாலையின் சந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…. அதிரடி விசாரணையில் போலீஸ்….!!

சாலையில் இருக்கும் சந்து ஒன்றில் வைத்து இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருக்கும் சாலை ஒன்றில் சந்து பகுதியில் இளம் பெண் ஒருவர் கடந்த 21ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் பாலியல் தொல்லை செய்த அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி […]

Categories
உலக செய்திகள்

போலீசாரின் அதிரடி நடவடிக்கை…. உக்ரேனிய நாட்டு இளைஞருக்கு நேர்ந்த கதி…. அரசு தரப்பில் விசாரணை….!!

23 வயது இளைஞர் ஒருவரை போலீசார் வீடு புகுந்து அதிரடியாக கைது செய்து இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் Zollikon பகுதியில் 23 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் உக்ரேனிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரால் சுவிஸ்  சமூகத்திற்கு மிகுந்த அச்சுறுத்தல் என உறுதி செய்யப்பட்டவுடன் போலீசார் அவரை வீடு புகுந்து கைது செய்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது […]

Categories
உலக செய்திகள்

விளையாடுபவர்கள் கண்முன் நடந்த கொடூரம்…. தன்மீது தீவைத்து கொண்ட பெண்…. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்….!!

கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் கண்முன்னே பெண் ஒருவர் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் மேற்கு யார்க்‌ஷையர் பகுதியில் Bradford நகரில் நேற்று காலை விடுமுறையை கொண்டாடுவதற்காக கோல்ப் விளையாடி கழிப்பதற்காக மைதானத்தில் மக்கள் கூடியிருந்தனர். அந்த சமயத்தில் 9:15 மணிக்கு ஒரு பெண் தன் மீது பெட்ரோலை ஊற்றி கொண்டு தீயை வைத்துள்ளார். இதனை கண்டதும் அங்குள்ள மக்கள் மருத்துவ உதவி குழுவினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தொலைபேசி மூலம் தகவல் […]

Categories
உலக செய்திகள்

mod நிறுவனம் தயாரித்த ஹெலிகாப்டர்…. வெளியாகும் புகையால் புற்றுநோய் பாதிப்பு…. அச்சத்தில் ராஜ குடும்பத்தினர்….!!

mod நிறுவனம் தயாரித்த ஹெலிகாப்டரில் இருந்து வெளியாகும் புகையின் மூலம்  ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதால் அந்நிறுவனம் அவருக்கு இழப்பீடு வழங்கியுள்ளது. Zach stubbings என்னும் விமானப்படை வீரர் raf sea king என்னும் ஹெலிகாப்டரை 15 ஆண்டுகளாக இயக்கி வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அவர் இயக்கிய இந்த ஹெலிகாப்டரின் எந்திரங்களில் இருந்து வெளியாகும் புகையின் மூலமாகவே அவருக்கு புற்றுநோய் உருவானது என தற்சமயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டர் புகையால் புற்றுநோய் […]

Categories
உலக செய்திகள்

மோதலில் ஈடுபட்ட 2 கால்பந்து அணியின் ரசிகர்கள்…. போலீசாரால் குண்டுக்கட்டாக தூக்கப்பட்ட நபர்…. வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

இரண்டு கால்பந்து அணியின் ரசிகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் போலீசார் ஒருவரை குண்டுகட்டாக தூக்கி வந்து சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் வடமேற்கு பகுதியில் மான்செஸ்டர் நகரில் நேற்று இரண்டு அணிகளுக்கு இடையில் கால்பந்து போட்டி நடக்கவிருந்தது. ஆனால் போட்டி நடக்கும் முன்னரே இரண்டு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கலவரமானதை அடுத்து போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

முனிச் நகரில் திருவிழா…. கொரோனா காரணமாக ரத்து…. தெரிவித்தார் மாகாண பிரதமர்….!!

முனிச் நகரில் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழா இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுவதாக மாகாண பிரதமர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் முனிச் நகரில் மிகப்பெரிய திருவிழாவான oktoberfest ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும். இந்த திருவிழாவில் உலகமெங்கிலும் உள்ளம் மக்கள் அதிகமாக திரண்டு வருவர். இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக ஆறு மில்லியன் மக்கள் ஒரே இடத்தில் கூடுவது பிரம்மிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக  இந்த திருவிழா ரத்து செய்யப்படுவதாக மாகாண பிரதமர் மார்க்கஸ் சோடர் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

2 படகுகள் நேருக்கு நேர் மோதல்…. 26 பேர் பலி…. வங்கதேசத்தில் பரபரப்பு….!!

இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 26 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் ஓடுகின்ற பத்மா நதியில் பங்களா பஜார் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் மணல் ஏற்றி மற்றொரு படகு சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு படகுகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காணாமல் போனதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் 5 பேர் […]

Categories
உலக செய்திகள்

இனி சமூக இடைவெளியை பின்பற்ற தேவையில்லை…. மகிழ்ச்சியில் மக்கள்…. தெரிவித்தார் இங்கிலாந்து பிரதமர்….!!

இனி சமூக இடைவெளியை பின்பற்ற தேவை இருக்காது என இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் வரும் ஜூன் மாதம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் முக்கிய தளர்வுகளை  ஏற்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. அதாவது ஜூன் மாதம் முதல் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற தேவையில்லை என அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் சூசகமாக தெரிவித்துள்ளார். இவர் இதை அறிவிப்பதற்கு முன்னதாகவே மே 17ஆம் தேதி முதல் ஆறு பேர் கொண்ட […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டிற்குள் வர அனுமதி தரோம்…. ஆனால் கட்டாயம் இதை பண்ண வேண்டும்…. தகவலை வெளியிட்டது ஐரோப்பிய ஆணையம்….!!

தடுப்பூசி போட்டுக்கொண்டால் வெளிநாட்டு பயணிகளும் எந்த தடையும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு நல்ல சுகாதார நிலைமை உள்ள நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகள் மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்ட நபர்களும் அத்தியாவசியமற்ற காரணங்களுக்காகவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் வழிமொழிந்துள்ளது. மேலும் பயணிகளின் தனிமைப்படுத்துதல் அல்லது சோதனை போன்ற நடவடிக்கைகள் இல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

அதிகாரிகளை பார்த்ததும் அதிர்ச்சி…. தண்டவாளத்தில் விடப்பட்ட கார்…. பரபரப்பில் சுவிஸ்….!!

ரயில் தண்டவாளத்தில் காரை விட்டு ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவிஸ் நாட்டில் ஜெனிவா எல்லையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் காரில் வந்து கொண்டிருந்த ஒருவர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிகாரிகளை கண்டதும் காரை திருப்பி ரயில் பாதை வழியாக தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் ரயில் தண்டவாளத்திலேயே காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அதே தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு ரயில் கார் மீது மோதி […]

Categories
உலக செய்திகள்

மே தின பேரணி…. 8000 பேர் கலந்துகொண்ட அணிவகுப்பில் கலவரம்…. 90 போலீசார் காயமடைந்தனர்….!!

மே தின பேரணியில் கலவரம் ஏற்பட்டதால் 90க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு மே தின பேரணிகள் நடைபெற்றுள்ளது. அவற்றில் பெரும்பாலான பேரணிகள் அமைதியாகவே நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் Neukoelln மற்றும் Kreuzberg நகரங்களில் 8,000 பேர் கொண்ட இடதுசாரி அணிவகுப்பு நடத்திய பேரணியில் வன்முறை வெடித்துள்ளது. அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் மீது ஆர்ப்பாட்டகாரர்கள் பாட்டில்களையும் கற்களையும் வீசி […]

Categories
உலக செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. தாய்க்கு விடுக்கப்பட்ட மிரட்டல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அவரது தாயாரை மிரட்டிய நபர்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் கிரேட் மேன்சஸ்டர் பகுதியில் வசித்து வருபவர் ஆண்ட்ரூ டேவிட் வால்ஸ். இவர் தனக்கு தெரிந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதைப்பற்றி சிறுமி தனது தோழியிடம் மெசேஜ் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனை சிறுமியின் தாயார் கண்டுபிடித்துள்ளார். இதை தெரிந்து கொண்ட ஆண்ட்ரூ சிறுமியின் தாயாரிடம் இதைப் பற்றி போலீசில் சொல்லக்கூடாது […]

Categories
உலக செய்திகள்

தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாத பெண்…. 30000 அடி உயரத்தில் பிரசவித்த ஆச்சரியம்…. குவியும் பாராட்டுகள்….!!

விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டதால்  அவர் விமானத்திலேயே பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் யூட்டா மாகாணத்தில் சால்ட் லேக் என்ற நகரில் வசித்து வரும் பெண் லவினியா மவுங்கா. இவர் கடந்த புதன்கிழமை அன்று சால்ட் லேக் நகரத்திலிருந்து ஹவாய் மாகாணத்திற்கு விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென தனது அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடுமையாக விமானத்தில் கத்தியுள்ளார். அந்த விமானத்தில் ஒரு மருத்துவர் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

திருவிழாவில் மகிழ்ச்சியாக இருந்த மக்கள்…. கூட்டத்திற்குள் புகுந்த கார்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!

திருவிழாவின் போது மக்கள் கூட்டத்திற்குள் காரை செலுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் நகரில் Volkmarsen பகுதியில் திருவிழா ஒன்று நடந்துள்ளது. அந்தத் திருவிழாவின்போது Maurice என்பவர் தனது காரை மக்கள் கூட்டமாக நின்று இடத்திற்குள் செலுத்தியுள்ளார். இதில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக சிறுவர்களும் இதில் அடங்குவர். மேலும் இந்த விபத்தில் 150 பேருக்கு மேலாக மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர் மீது 96 கொலை முயற்சி வழக்குகளும் மோசமான அளவில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் குற்றத்திற்காக […]

Categories
உலக செய்திகள்

பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. 15 வருடத்திற்கு பிறகு சிக்கிய காவல்துறை அதிகாரி…. 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு….!!

பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தின் பீட்டர்பாரோ பகுதியில் வசித்து வருபவர் கிறிஸ்டோபர் ராபர்ட்சன். இவர் முன்னாள் காவல்துறை அதிகாரி ஆவர். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு பெண் ஒருவரை பாலியல் தொல்லை செய்ததாக கூறி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில்  கடந்த ஜனவரி மாதம் விசாரணை தொடங்கியுள்ளது. இதில் ராபர்ட்சன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய பெட்ரோல் டேங்கர் லாரிகள்…. 9 பேர் பலி…. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு….!!

பெட்ரோல் டேங்கர் லாரிகள் வெடித்து சிதறிய விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் வடக்குப் பகுதியில் ஒரு பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் 50 பெட்ரோல் டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததில் ஒரு டேங்கர் லாரி மட்டும் திடீரென நேற்று வெடித்து சிதறியுள்ளது. இதில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த டேங்கர் லாரிகளுக்கும் பரவி வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில்  மொத்தமாக 50க்கும் மேற்பட்ட லாரிகள் வெடித்து […]

Categories
உலக செய்திகள்

திடீரென வீசிய சூறாவளி…. சேதமடைந்த கட்டிடங்கள்…. சாலையில் கவிழ்ந்த கார்கள்….!!

பலத்த காற்று வீசியதால் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. ஜப்பான் நாட்டில் ஷிஜுவோக்கா மாகாணத்தில் மகினோஹாரா நகரில் பலத்த காற்று நேற்று வீசியுள்ளது. இந்த காற்று திடீரென சூறாவளியாக மாறியது. இதனால் கட்டிடங்களின் மேற்கூரைகள் காற்றில் பறந்து ஓடின. மேலும் வீடுகளில் ஜன்னல்கள் நெருங்கியுள்ளது. மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த கார் கவிழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். ஆனால் எந்தவித உயிர் பலியும் ஏற்படவில்லை. கடந்த இரண்டு நாட்களாக வீசும் இந்த பலத்த காற்றினால் 3பேர் […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று வீசிய புயல்…. இரவெல்லாம் பெய்த கனமழை…. வெள்ளத்தில் சூழ்ந்த சீனா…. 11 பேர் பலி….!!

புயல் மழையின் காரணமாக சீனாவில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கிழக்கு பகுதியில் உள்ள கியாம் மாகாணத்தில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த புயல் வீசியுள்ளது. இந்த புயலானது மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியுள்ளது. இந்த புயலினால் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளது. மேலும் இந்த புயலை தொடர்ந்து அங்கு கன மழை பெய்துள்ளதால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்து 300க்கும் […]

Categories
உலக செய்திகள்

விண்ட்சர் கோட்டை வளாகத்தில் நுழைந்த இருவர்…. கைது செய்த போலீசார்…. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்….!!

விண்ட்சர் கோட்டை வளாகத்தில் நுழைந்த இருவரால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவை விண்ட்சர்  கோட்டையில் இளவரசர் ஆண்ட்ரூவின் இல்லம் அருகில் கடந்த 25ஆம் தேதி 31 வயது நபர் மற்றும் 29 வயதுடைய அவரது காதலி ஆகிய இருவரும் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள் பெண் ஒருவர் தவறுதலாக இளவரசர் ஆண்ட்ரூவின் இல்லம் அருகே அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரம் இளவரசர் ஆண்ட்ரூ தனது […]

Categories
உலக செய்திகள்

நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை உயர்வு…. தெருக்களில் குழிதோண்டி புதைக்கப்படும் சடலங்கள்…. பீதியில் பிரேசில்….!!

பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் பிரேசில் நாட்டில் தெருக்களில் குழி தோண்டி சடலங்களை புதைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீயாய் பரவி நாட்டையே புரட்டிப் போட்டுள்ளது. மேலும் நாளொன்றுக்கு அங்கு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3001 கடந்துள்ளது. இதனால் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் மயானங்களில் சடலங்களை புதைப்பதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள தெருக்களில் சடலங்களை புதைக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் […]

Categories
உலக செய்திகள்

குளியல் தொட்டியில் குளியல்…. தவறி விழுந்த மொபைல் போன்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்….!!

இளம்பெண் ஒருவர் குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும்போது மின் இணைப்பில் இருந்த மொபைல் போனால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் St. Gallen மாகாணத்தில் இருக்கும் gossau நகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் வியாழக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு குளிப்பதற்காக குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்துள்ளார். அதன்பின் அவர் மின் இணைப்பில் இருந்தவாறு தனது மொபைல் போனில்  அவருக்குப் பிடித்தமான நிகழ்ச்சி ஒன்றை வைத்து பார்த்தபடியே […]

Categories
உலக செய்திகள்

மே 4 முதல் இவர்கள் வர முடியாது…. சில விலக்குகளும் உண்டு…. அறிவித்தது ஜோ பைடன் அரசு….!!

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதித்த ஜோ பைடன் அரசு சில விலக்குகளையும் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இது உலகையே ஆட்டிப்படைக்கும் சக்தியாக மாறிக்கொண்டிருக்கிறது. இது இந்தியாவில் தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கையாக 4 லட்சத்தை கடந்ததை அடுத்து பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இந்தியாவுடனான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மே 4 தேதி முதல் இந்தியர்கள் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

14-வது இடத்தில் இருக்கிறது…. ஈரானில் தீயாய் பரவும் கொரோனா…. 70000-ஐ கடந்த பலி எண்ணிக்கை….!!

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70000 ஐ கடந்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். உலக அளவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளது. இதுவரை 15 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரான் 14 வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,272 […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான போராட்டம்…. இந்தியாவிற்கு உதவ தயார்…. தெரிவித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்….!!

கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவிற்கு சீனா உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவுக்கு ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகள் மருத்துவ உதவிப் பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து உதவி செய்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சீனாவும் இணைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவதில் […]

Categories
உலக செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிப்பு…. தீயாய் பரவும் கொரோனா…. பலி எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது….!!

பிரேசிலில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை நாள் ஓன்றுக்கு 3000 ஐ கடந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருப்பது பிரேசில் தான். மேலும் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா இந்தியா அதன்பின் மூன்றாவதாக பிரேசில் தான் உள்ளது. இங்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக நாளொன்றுக்கு பிரேசிலில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000 கடந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 4 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 […]

Categories
உலக செய்திகள்

12 வயதினருக்கும் போட வேண்டும்…. அனுமதி கொடுங்க…. பைசர் நிறுவனத்தின் வேண்டுகோள்….!!

12 முதல் 15 வயதினருக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி தருமாறு இரண்டு நிறுவனங்களும் ஐரோப்பிய மருந்து நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. பயோஎன்டெக் நிறுவனமும் பன்னாட்டு மருத்துவ நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது தடுப்பூசியை ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 27  நாடுகளிலும் இருக்கும் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இந்த தடுப்பூசியை ஐரோப்பாவில் 12 முதல் 15 வயதினருக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என இந்த இரண்டு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு…. மின் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலி…. தேடும் பணியில் மீட்பு குழுவினர்….!!

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் பலரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தோனேசியா நாட்டில் சுமத்ரா தீவில் ஒரு மின் ஆலை செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலை சீனாவின் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில் பல தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில் சுமத்ரா தீவில் நேற்று முழுவதும் கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் அப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மின் ஆலை பகுதிகளிலும் நிலச்சரிவு […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் நடைபெற்ற மத திருவிழா…. படிக்கட்டில் சரிந்த மக்கள்…. 44 பேர் உடல் நசுங்கி பலி….!!

இஸ்ரேலில் மத திருவிழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் லாக் பி ஓமர் என்கிற பெயரில் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் மத திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழா இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள புனித நகரமான  மவுண்ட் மெரான் நகரில் உள்ள கல்லறையில் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் திரண்டு வந்து கொண்டாடுவர். இந்த திருவிழா கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.6 பதிவு…. தெரிவித்தது தேசிய நிலநடுக்க ஆய்வு மையம்….!!

ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டில் ஹோன்சு நகரில் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஷினோமகிக்கு தென்கிழக்கில் சுமார் 45 கி.மீ தொலைவில் இன்று காலை 6.30 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க வியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

Categories
உலக செய்திகள்

மருத்துவமனை வளாகத்தில் நடந்த விபரீதம்…. நோம்பு துறந்த சிறிது நேரத்தில் குண்டுவெடிப்பு…. 30 பேர் பலி…. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு….!!

மருத்துவமனை வளாகத்தில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் லோகர் மாகாணத்தில் தலைநகரில் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன 16 வயது சிறுமி…. பொதுமக்களின் உதவியை நாடிய போலீசார்…. வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ தகவல்….!!

காணாமல் போன சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர். கனடாவில் ரொறன்ரோ பகுதியில் தரணிதா ஹரிதரன் என்ற 16 வயதுடைய சிறுமி வசித்து வந்தார். இவர் கடந்த 29ஆம் தேதி மதியம் காணாமல் போனதால் அவருடைய பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் தரணிதா ஹரிதரனை பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசார் பொதுமக்களின் உதவியை நாடினர். அதன்படி அவர் கடைசியாக அணிந்திருந்த உடையின் […]

Categories
உலக செய்திகள்

பணத்திற்காக காதலன் செய்த கொடூரம்…. காதலியை அரைகுறை ஆடையுடன் நிறுத்தி கொடுமை…. நேரலையில் உயிரிழந்த காதலி….!!

பணத்திற்காக தனது காதலியை வெறும் உள்ளாடையுடன் நிறுத்தி நேரலையில் கொடுமை செய்த யூடியூப் பிரபலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டில் stanislav reshetnikov என்ற யூடியூப் பிரபலம் வசித்து வருகிறார். இவருடைய காதலி valentina. இவருக்கு 28 வயது ஆகும். இவர் தற்போது 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். Stanislav Reshetnikov தனது காதலியான valentina பணத்திற்காக அரைகுறை ஆடைகளை அணிய வைத்து கொடுமைப்படுத்தி பார்ப்பார். அதன்படி அவருக்கு ஒருவர் ஆயிரம் டாலர்கள் தருவதாகவும் அதற்காக […]

Categories
உலக செய்திகள்

காதலியை சீரழிக்க நினைத்ததற்கு தண்டனை…. பிறப்புறுப்புகளை வெட்டிய காதலன்…. காட்டுபன்றிக்கு இரையாக்கிய அதிர்ச்சி சம்பவம்….!!

தனது காதலியை கற்பழிக்க முயன்ற உறவினரின் ஆண் உறுப்புகளை காதலன் வெட்டி காட்டுப்பன்றிகளுக்கு இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் minas gerais மாகாணத்தில் வசித்து வருபவர் 20 வயதுள்ள பெண். இவருடைய உறவினர் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அப்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அவரின் நோக்கம் அந்த இளம் பெண்ணை கற்பழிக்க வேண்டும் என்பதாகும். இதனை அறிந்த பெண்ணின் காதலன் தனது உறவினரை கூட்டு சேர்த்துக்கொண்டு காதலியை கற்பழிக்க முயன்ற நபரை […]

Categories
உலக செய்திகள்

சொகுசாக வாழ நினைத்த இளைஞன்…. 35 பெண்களுடன் டேட்டிங்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

டேட்டிங் என்ற பெயரில் 35 பெண்களை ஏமாற்றிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் நாட்டில் kansai மாகாணத்தின் takashi miyagawa என்ற நபர் 35 பெண்களுடன் பழகி அவர்களுடன் டேட்டிங் வாழ்க்கையே வாழ்ந்து ஏமாற்றியுள்ளார். மேலும் இவர் ஒவ்வொரு பெண்ணிடமும் தனது பிறந்தநாளை ஒவ்வொரு நாளாக குறிப்பிட்டு அவர்களுடன் டேட்டிங் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை அறிந்த அந்தப் பெண்கள் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

வெடித்தது ஆக்சிஜன் சிலிண்டர்…. 82 பேர் பலி…. பரபரப்பில் ஈராக்….!!

கொரோனா வைரஸ் பரவி கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு அதிர்ச்சி தரும் சம்பவங்கள் உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு அதிர்ச்சி தரும் சம்பவங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதில் முக்கியமானது ஈராக் நாட்டில் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பரவி நோயாளிகள் இருக்கும் அறைக்கு வந்துள்ளது. இதனால் அவர்கள் தப்பிக்க முடியாமல் அங்குள்ள 82 பேரும் தீயில் […]

Categories
உலக செய்திகள்

#StayStrongIndia…. மின்விளக்குகளை ஒளிரச் செய்த அபுதாபி…. தங்களது ஆதரவை தந்த ஐக்கிய அரபு அமீரகம்….!!

கொரோனாவின் இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு ஆதரவையும் நம்பிக்கையையும் அளிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் நெகிழ்ச்சியூட்டும் வகையில் மின்விளக்குகளை ஒளிரச் செய்தது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. மேலும் நோய்த்தொற்ரை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியாவும் போராடி வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் இந்திய மக்களுக்கு ஆதரவையும் நம்பிக்கையும் அளிக்கும் விதமாக […]

Categories
உலக செய்திகள்

கனடா பல்கலைக்கழகம்…. “தமிழ் இருக்கை” உருவாக வேண்டும்…. ரூ 10 லட்சம் நிதி வழங்கிய தி.மு.க தலைவர்….!!

கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு “தமிழ் இருக்கை” உருவாக்குவதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். கனடாவிலுள்ள ரொறொன்ராப் பல்கலைக்கழகத்தில் “தமிழ் இருக்கை” உருவாக்குவதற்காக கனடா வாழ் தமிழர்களும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிதி தர வேண்டும் என்று கனடிய தமிழர் பேரவை நிறைவேற்று இயக்குனர் டன்ரன் துரைராஜா கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன்…. கப்பல் மூலம் இந்தியா வருகை…. நன்றி தெரிவித்த இந்திய தூதரகம்….!!

சவுதி அரேபியா 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை இந்தியாவிற்கு கொடுத்து உதவியுள்ளது. உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா சாவின் பிடியில் சிக்கிக்கொண்டு தவித்து வருகின்றது. மேலும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் படுக்கைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் பலியாக நேரிடுகிறது. அதனால் நாட்டில் தேவைப்படும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு பிரித்தானியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற […]

Categories
உலக செய்திகள்

உதவுவதற்கு நாங்களும் இருக்கிறோம்…. நிதி திரட்டி கொண்டிருக்கிறோம்…. தெரிவித்தார் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்….!!

கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ள இந்தியாவிற்கு உதவுவதற்காக பிரான்ஸ் நாடு முன்வந்துள்ளது. உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் நோய்த்தொற்றுகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அதில் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது. இந்தியாவிற்கு உதவுவதற்காக முன்வந்த பிரித்தானியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் தற்போது பிரான்சும் இணைந்துள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டு அரசு இந்தியாவிற்கு கூடுதல் ஆக்சிஜன் சப்ளையை வழங்கவும் தேவைப்படும் வென்டிலேட்டர் மற்றும் பல மருத்துவ உபகரணங்களை […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பை ஏற்படுத்திய பேட்டி…. இன்னும் பிரச்சனை தீரவில்லை…. வெளிப்படையாக பேசிய ஓபரா….!!

இளவரசர் ஹாரி மேகன் இருவரும் ஓபரா வின்ஃப்ரேக்கு பேட்டியளித்தது குறித்து அவர் கூறியுள்ளார். இளவரசர் ஹாரியும் மேகமும் ஓபரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டியில் தன் மகன் ஆர்ச்சி பிறக்கும் போது அவனது தோலின் நிறம் எப்படி இருக்கும் என ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்புவதாக மேகன் கூறியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும் ஒரு கணம் தான் அதிர்ச்சியில் வாய்பிளந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பெட்டியை தொடர்ந்து என்னை குறித்து […]

Categories
உலக செய்திகள்

தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது…. இந்தியா மக்களுக்கு ஆதரவு வழங்க நாங்கள் தயார்…. ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் செய்தி தொடர்பாளர்….!!

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் இந்திய மக்களுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பிரான்ஸ் இந்தியாவுடனான தற்காலிக போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. இருப்பினும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்திய மக்களுக்கு தனது ஆதரவு கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இந்திய மக்களுக்கு எனது தோழமை செய்தியை அனுப்ப விரும்புகிறேன். இந்த போராட்டதில் […]

Categories
உலக செய்திகள்

நமக்கு ஒரே எதிரி இதுதான்…. இந்தியாவிற்கு உதவ தயார்…. முன்வந்த சீனா….!!

கொரோனா தொற்றை சமாளிக்க இந்தியாவிற்கு உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக சீனா முன்வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவின் தொற்று எண்ணிக்கை 3,32,730 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இது கடந்த ஆண்டு தொற்று உருவத்திலிருந்து அதிகபட்ச தொற்று எண்ணிக்கை பதிவாகியது இதுவே முதன்முறையாகும். இந்நிலையில் அண்மையில் […]

Categories
உலக செய்திகள்

லாரிகளுக்கு இடையே சிக்கிய கார்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…. சோகத்தில் பிரேசில்….!!

இரண்டு லாரிகளுக்கு இடையே ஒரு கார் சிக்கி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரேசிலில் Santa Maria do Para என்ற இடத்தில் சாலையில் இரண்டு லாரிகளுக்கு இடையே ஒரு கார் சிக்கி நசுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காருக்குள் இருந்த 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்று இன்னும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து தகவல் […]

Categories
உலக செய்திகள்

அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிபவர்கள்…. கொரோனா பரிசோதனை கிட்கள்…. இலவசமாக வழங்க அரசு உத்தரவு….!!

வீட்டில் இருந்து பணி செய்யாமல் அலுவலகங்களுக்கு வரும் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை கிட்களை வழங்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஜெர்மனியில் வீட்டிலிருந்து பணி செய்யாமல் அலுவலகங்களுக்கு வரும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனமே கொரோனா பரிசோதனை கிட்களை இலவசமாக வழங்க வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த கிட்களை பயன்படுத்தி வாரத்துக்கு ஒருமுறையாவது கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் இதனை பயன்படுத்துவதற்கு பணியாளர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் எனவும் […]

Categories
உலக செய்திகள்

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடந்த போர்…. நாட்டின் ஜனாதிபதி மரணம்…. அறிவித்தார் இராணுவ செய்தி தொடர்பாளர்….!!

Chad ஜனாதிபதி இறந்த சம்பவத்தை ராணுவ செய்தி தொடர்பாளர் அரசு தொலைக்காட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வடக்கு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் களத்தில் மோதலில் ஈடுபட்டு வந்த ராணுவ படைகளை பார்வை இடும்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜனாதிபதி  Idriss Deby மரணமடைந்துள்ளார். இந்த செய்தியை ராணுவ செய்தி தொடர்பாளர் Azem Bermandoa Agouna அரசு தொலைக்காட்சி வாயிலாக உறுதி செய்துள்ளார். மேலும் மறைந்த ஜனாதிபதியின் மகன் Mahamat Kaka இடைக்கால அரசு தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல் […]

Categories
உலக செய்திகள்

படுக்கையிலிருந்து எழுந்தவுடன் எடுக்கப்பட்ட புகைப்படம்…. பழுது பார்க்கும் பணிக்காக அனுப்பப்பட்டது…. பின் பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்….!!

பெண் ஒருவர் மூன்று பேருக்கு தனது நிர்வாண புகைப்படத்தை தவறுதலாக அனுப்பியுள்ளார். பக்கிங்காம் பகுதியில் Roseanne என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பழுதுபார்க்கும் வேலை இருப்பதால் அந்த இடத்தை புகைப்படம் எடுத்து பழுதுபார்க்கும் பணியாளர்கள் மூவரிடம் அனுப்பியுள்ளார். அந்த இடத்தை பழுதுபார்ப்பதற்கு யார் குறைவாக பணம் கேட்கிறார்களோ அவருக்கு அந்த வேலையை கொடுப்பது என அவர் திட்டமிட்டிருந்தார். அதன்பின் அந்த மூவருக்கும் அவர் அந்த புகைப்படத்தை அனுப்பி இருந்தார். அதில் ஒரு நம்பர் […]

Categories

Tech |