கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களை நோக்கி ஓடிய மக்கள் கொரோனா தாக்கத்திற்கு பின் நகர்ப்புற ஆசையை விட்டுவிட்டு கிராமங்களை நோக்கி குடிபெயர ஆரம்பிப்பார்கள் என ஒரு சில தரவுகளின் அடிப்படையில் கூறப்பட்டுவருகிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல நிறுவனங்களும் கம்ப்யூட்டர் துறை ரீதியான பணிகளும் தங்களது நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தி வந்தனர். சென்னையை பொருத்தவரையில் 70 சதவிகிதம் ஐடி துறையை சார்ந்த வெளியூர்களில் இருந்து ஆட்கள் இங்கே வந்து பணிபுரிந்து வருகின்றனர். […]
