நகராட்சியை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு சங்கம் சார்பாக நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட செயலாளர் சரவணன், முருகேசன் மற்றும் சின்ன கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து ஆர்ப்பாட்டத்தை கூட்டமைப்பு தலைவர் ரங்கன் தொடங்கி வைத்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, குப்பைகள் கொட்ட இடம் ஒதுக்கித் தருமாறும், பேட்டரி வண்டிகளை நகராட்சி நிர்வாகமே […]
