கோவில் பணியாளர்களுக்கு பொங்கலுக்காக 1000 ரூபாயை வழங்குவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகரன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் திருக்கோவில் பணியாளர்களுக்கு ரூபாய் 1000 பொங்கல் கருணை கொடையாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு பகுதி நேரம், முழு நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட முதுநிலை அல்லாத மற்றும் முதுநிலையில் உள்ள அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் இந்த கருணை கொடை தொகையை வழங்க […]
