தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு ரதவீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் செல்வராஜை […]
