தனக்கு இயலாத நிலையிலும் மனிதநேயத்துடன் குரங்குகளுக்கு உணவளித்து வரும் கூலித்தொழிலாளியின் பணியை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர். தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் வேங்கூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை ஓரங்களில் புளிய மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த புளிய மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த குரங்குகள் உணவு தேடி சாலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிவதையும், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று ஏக்கத்தோடு பரிதாபமாக பார்த்துக் […]
