ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய உருளைக்கிழங்கு மூட்டைக்குள் பாம்பு ஓன்று உயிருடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வூல்வொர்த்ஸ் எனும் பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனம் (Woolworths Supermarkets) பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இயங்கி வரும் கிளைகளுள் ஒன்றான வூல்வொர்த்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து, மரிசா டேவிட்சன் (Marissa Davidson) என்ற இளம்பெண் ஒருவர் 4 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டையை வாங்கினார். […]
