இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடர் அடுத்த மாதம் தொடங்கயிருப்பதால், அதற்கு தயாராகும் விதமாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 மகளிர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். […]
