காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து இந்தியாவின் சானியா மிர்சா விலகிய நிலையில், இன்று மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்திலிருந்தும் பாதியிலேயே விலகினார். மெல்போர்னில் இந்த ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் நடைபெறுகிறது. இந்த நிலையில், வலது பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து தான் விலகுவதாக இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்திருந்தார். இருப்பினும், மகளிர் இரட்டையர் பிரிவில் உக்ரைனின் நடியா கிச்னோக்குடன் […]
