தேர்வு எழுத போன பெண் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள இல்லாங்கூர் பகுதியில் அருள் பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகிதா என்ற மனைவி உள்ளார். இவர் சிதம்பரத்தில் இருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்ற சுகிதா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த கணவர் பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் சுகிதா கிடைக்கவில்லை. […]
