அம்மிக் கல்லால் கணவனை கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குச்சிபாளையம் காலனி தெருவில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஹோட்டலில் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் 4 வருடங்களுக்கு முன்பாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அதன்பின் மனைவியை பார்ப்பதற்காக இளையராஜா வந்த நிலையில் கொடூரமான முறையில் […]
