அனுமதி இன்றி வீடுகளில் செட் அமைத்து பட்டாசு தயார் செய்தவரை காவல்துறையினர் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் அனுமதி பெறாமல் காட்டுப் பகுதிகளிலும், வீடுகளிலும் செட் அமைத்து பட்டாசுகள் தயாரிக்கின்றனர். இதுகுறித்து வெம்பக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை ஆற்றுப்படுகையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் வெம்பக்கோட்டை பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவர் அனுமதி இன்றி […]
