ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வபோது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் குட்டியுடன் காட்டு யானை உலா வந்தது. அந்த யானை 3 கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் நடந்து வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் […]
