சிகிச்சை பலனின்றி உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முள்ளங்காடு பகுதியில் வீரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் 10 வயது மதிக்கத்தக்க காட்டு யானை வாயில் காயத்துடன் எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்டு படுத்து கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி யானை பரிதாபமாக இறந்துவிட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, அவுட்டுகாய் காரணமாக காயம் ஏற்பட்டு […]
