யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காடகநல்லி மலை கிராமத்தில் சித்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சித்துவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் சித்து காடகநல்லி வனப்பகுதிக்கு விறகு பொறுக்க சென்றுள்ளார். ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது பெருமடுவு பள்ளம் அருகே […]
